'ப்ரீத்தி ஜிந்தா' பதிவிட்ட 'போட்டோ'... "என்ன உங்க 'டீம்'ல எடுத்துக்கோங்க..." 'கமெண்ட்' செய்த பிரபல 'வீரர்'... உடைந்தே போன 'ரசிகர்கள்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தாண்டு தொடருக்கான ஐபிஎல் ஏலம் நேற்று சென்னையில் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், மோரிஸ், ஜெமிசன், மேக்ஸ்வெல் உள்ளிட்ட வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போயினர்.
முன்னதாக, இந்த ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டி, சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பெயர் கொடுத்திருந்த நிலையில், அதிலிருந்து 292 வீரர்கள் மட்டுமே ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ள தேர்வாகினர். கேரள வீரரான ஸ்ரீசாந்த், ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டி பதிவு செய்திருந்த நிலையில், அவரது பெயர் ஏல பட்டியலில் இடம்பெறவில்லை.
ஐபிஎல் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்டிருந்த நிலையில், தடைக்காலம் முடிந்த பிறகு தீவிர பயிற்சியை ஸ்ரீசாந்த் மேற்கொண்டு வந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த சையது முஸ்தாக் அலி தொடரிலும் கேரளா அணிக்காக ஆடியிருந்தார். ஐபிஎல் தொடரில் மீண்டும் பங்குபெற்று, சர்வதேச அணிக்காக மீண்டும் ஆடுவதே தனது நோக்கம் என அவர் கூறியிருந்தார்.
ஆனால், ஐபிஎல் ஏலத்திற்காக ஸ்ரீசாந்த் தேர்வாகாத நிலையில், மனம் தளராமல் மீண்டும் மீண்டும் முயற்சியை மேற்கொண்டே இருப்பேன் என தன்னம்பிக்கையுடன் ஸ்ரீசாந்த் தனது சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டிருந்தார். இருந்தாலும், அவரை ஐபிஎல் தொடரில் பார்க்க வேண்டி காத்திருந்த ரசிகர்கள் கலங்கி போயினர்.
இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா, ஐபிஎல் ஏலம் நேற்று ஆரம்பிப்பதற்கு முன்னர், தனது இன்ஸ்டாக்ராமில் புகைப்படத்துடன், 'எந்தெந்த வீரர்களை அணியில் எடுக்க போகிறோம் என்பதை அறிய ஆவலாக உள்ளோம்' என குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவில் கமெண்ட் செய்த ஸ்ரீசாந்த், முதலில் தன்னை அணியில் எடுக்கும் படி தனது பெயரை குறிப்பிட்டார். அதன் பிறகு, 'நான் ஐபிஎல் ஏலத்தில் தேர்வாகவில்லை. இருந்தாலும் நீங்கள் என்னை அணியில் எடுக்க முடியும்' என கூறினார். மீண்டும், அடுத்த கமெண்ட்டில், 'வாழ்த்துக்கள். கடவுள் அனைவரையும் ஆசீர்வதிப்பார்' என அடுக்கடுக்கான கமெண்ட்களை அவர் செய்தார்.
ஐபிஎல் தொடருக்காக அவர் தேர்வாகாததால், ஸ்ரீசாந்த் இப்படி கமெண்ட் செய்திருந்த நிலையில், இதன் கீழ் அவருக்கு ஆதவராக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஸ்ரீசாந்த் தனது ஐபிஎல் பயணத்தை பஞ்சாப் அணியில் இருந்து தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.