நடுவுல அந்த ஒத்த ‘வார்த்தை’ தான் மிஸ்ஸிங்.. சிஎஸ்கே போட்ட ‘கலக்கல்’ ட்வீட்.. பஞ்சாப் அணி கொடுத்த ‘சூப்பர்’ பதில்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபுதிய பெயர் மாற்றிய பஞ்சாப் அணிக்கு சிஎஸ்கே தனது டுவிட்டர் பக்கத்தில் வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்துள்ளது.

14-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் இன்று (18.02.2021) சென்னையில் நடைபெற உள்ளது. இதனால் ஏலத்தில் கலந்துக்கொள்ள உள்ள அணிகளின் நிர்வாகிகள், கிரிக்கெட் வீரர்கள் ஒரு வாரத்துக்கு முன்பாகவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் என மொத்தமாக 1,114 பேர் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர். இதில் 292 வீரர்களை இறுதி செய்த பிசிசிஐ, சமீபத்தில் பட்டியலை வெளியிட்டது.
இந்த ஐபிஎல் தொடரில் இருந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தங்களது அணி பெயரை ‘பஞ்சாப் கிங்ஸ்’ என மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.13 ஐபிஎல் சீசனில் ஒரு முறை கூட பஞ்சாப் அணி கோப்பையை வெல்லவில்லை. அதனால்தான் இந்த பெயர் மாற்றம் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணி தனது டுவிட்டர் பக்கத்தில் பஞ்சாப் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. அதில், விஜய்சேதுபதி நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ படத்தின் போட்டோவை பதிவிட்டு, நடுவுல கொஞ்சம் சூப்பரை காணோம்’ என பதிவிட்டு பெயர் மாற்றத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
NANBENDA! 🤝
We look forward to some epic matches with loud whistles, @ChennaiIPL! 🤟
— Punjab Kings (@PunjabKingsIPL) February 17, 2021
இதற்கு பதிலளித்த பஞ்சாப் கிங்ஸ் அணி, ‘நண்பேன்டா, பலத்த விசில் சத்தத்துடன் பல போட்டிகளை எதிர்பார்க்கிறோம்’ என பதிவிட்டுள்ளது.

மற்ற செய்திகள்
