‘நயா போஸ்ட் சுந்தர் தோஸ்த்...’ ‘அந்த’ 3 பேரும் அப்படி என்னதான் பண்றாங்க...? வைரலாகும் கோலியின் ட்வீட்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மிக வேடிக்கையான புகைப்படம் ஒன்றை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தற்போது நியூசிலாந்தில் இருக்கும் விராட் கோலி, தனது அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் இளம் தொடக்க ஆட்டக்காரர் பிருத்விஷா ஆகியோருடன் எடுத்துக்கொண்ட ஒரு படத்தை ட்வீட் செய்துள்ளார். போட்டிகளிலிருந்து விலகி இருக்கும்போது விராட் கோலி, ட்விட்டரில் ஆர்வமாக பல தகவல்களை வெளியிடுவார். அது அவரது ரசிகர்களை குதுகலப்படுத்துவது வாடிக்கை.
ஆகவே, கோலியின் ரசிகர்கள் எப்போதுமே அவரது ட்விட்டர் பக்கத்தில் ஏதாவது ஒரு புதிய பதிவுகள் இருக்கிறதா? எனத் தேடிக்கொண்டே இருப்பார்கள். மேலும் கோலி ஏதாவது புதிய படங்களை, வீடியோக்களை டிவிட்டரில்போட்ட உடனே சமூக வலைதளங்களில் வைரலாக பரவி விடும்.
தற்போது, கோலி ட்விட்டரில் புதிய குறும்புத்தனமான புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியுடன் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமி மற்றும் பிரித்வீ ஷா ஆகியோர் உள்ளனர்.
இந்தப் படத்தை பார்க்கவே வேடிக்கையாக உள்ளது. ஏனெனில் அப்படத்தில் உள்ள மூவரும் வித்தியாசமான முகபாவனைகளை செய்து காட்டுகின்றனர். ‘நயா போஸ்ட் சுந்தர் தோஸ்த்’ என அதற்கு கோலி தலைப்பிட்டுள்ளார்.
Naya post Sundar dost 🤪 pic.twitter.com/2ZQ9R9IeSB
— Virat Kohli (@imVkohli) February 16, 2020
