இப்டி பெஞ்சுல 'ஒக்கார' வைக்கத்தான்... டிக்கெட் போட்டு 'கூட்டி' போனீங்களா?... பொங்கியெழுந்த 'ஐபிஎல்' ஓனர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Feb 14, 2020 01:24 AM

சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்களில் இளம்வீரர் ரிஷப் பண்டுக்கு கடைசிவரை வாய்ப்பு வழங்கப்படவில்லை. கேப்டன் விராட் கோலியின் இந்த செயல் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. பண்டை விட கே.எல்.ராகுல் நன்றாக கீப்பிங் செய்ததால் தொடர்ந்து 10 போட்டிகளில் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக களமிறங்கி இருக்கிறார்.

IPL 2020: DC Owner criticizing Team India selection, twitter reacts

அவரின் செயல்பாடு விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் என இரண்டிலும் சிறப்பாக இருந்ததால், கோலியும் தொடர்ந்து  வழங்கி வருகிறார். சஞ்சு சாம்சன், சிவம் துபே, நவ்தீப் சைனி, பிரித்வி ஷா என தொடர்ந்து இளம்வீரர்களுக்கு வாய்ப்பளித்த கோலி, பண்டுக்கு மட்டும் ஒரு வாய்ப்பு கூட அளிக்கவில்லை.

இந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பார்த் ஜிண்டால் இதுகுறித்து ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பி இருக்கிறார். இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ''ரிஷப் பண்ட் விளையாடாமல் கடைசிவரை பெஞ்சிலேயே அமர்ந்திருக்க வேண்டுமா? அவரை இந்திய அணியில் சேர்க்காமல் இருந்திருந்தால் கண்டிப்பாக இந்திய ஏ அணி அல்லது உள்ளூர் போட்டிகளில் விளையாடி இருப்பார். திறமையான ஒரு வீரருக்கு வாய்ப்பு தராமல் நிராகரிப்பதில் எந்தவித அர்த்தமும் இல்லை,'' என விமர்சனம் செய்துள்ளார்.

இதுபோல அஸ்வின் எடுக்கப்படாதது குறித்து அவர், '' அஸ்வினுக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று தெரியவில்லை.ஒருநாள் தொடரில் இந்திய அணியை நியூசிலாந்து அணி ஒயிட் வாஷ் செய்ததை பார்க்கும்போது உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணி தற்செயலாக வெற்றி பெறவில்லை இந்திப்பது தெரிகிறது. இந்தியாவுக்கு தற்போது விக்கெட் எடுப்பவர்களும், விளையாடுபவர்களும் தேவை,'' என ஆலோசனை வழங்கி இருக்கிறார்.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் உங்களது கேள்வி சரியானது தான் என அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஐபிஎல் அணி உரிமையாளர் ஒருவர் இந்திய அணியின் தேர்வு முறையை, இந்திய அணியை விமர்சிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.