'காயத்திலிருந்து மீண்ட வீரர்'... 'அப்பாடா ஒரு வழியா அவரு அணிக்கு திரும்பிட்டாரு'... 'நிம்மதி அடைந்த பிசிசிஐ'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Feb 16, 2020 06:16 PM

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த இஷாந்த் சர்மா உடற்தகுதி பெற்றதால் அணி நிர்வாகம் நிம்மதி அடைந்துள்ளது.

Ishant Sharma joins indian Team After clears Fitness Test

ரஞ்சிக் கோப்பை போட்டிக்காக கடந்த மாதம் 20ம் தேதி டெல்லி அணி சார்பில் களமிறங்கிய இஷாந்த் சர்மா, விதர்பா அணிக்கு எதிராக மோதினார். அப்போது ஒரு பந்தை எதிர்கொண்டபோது அவருக்கு வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மருத்துவ சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் 6 வார காலங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை அவர் இழந்தார்.

இந்நிலையில் பெங்களூருவில் உள்ள கிரிக்கெட் தேசிய அகாடமியில் உடற்தகுதியை நேற்று இஷாந்த் சர்மா நிரூபித்துள்ளார். இதையடுத்து நியூசிலாந்திற்கு எதிராக வரும் 21-ம் தேதி நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் இஷாந்த் சர்மா இணைந்துள்ளார். மூத்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளதால் தற்போது கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் பிசிசிஐ நிர்வாகிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags : #BCCI #VIRATKOHLI #ISHANT SHARMA #IND VS NZ #TEST #MATCH