'அவரு இப்போலாம் சரியா விளையாடுறதே இல்லன்னு சொல்றாங்க...' 'ஆனா அவருக்கு தெரியும் எப்போ என்ன பண்ணனும்னு...' - விராட் கோலி கருத்து...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து இடையில் நாளை துவங்கவுள்ள 4-வது டெஸ்ட் போட்டியையொட்டி கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களிடம் பேசினார்.

புஜாரா சரியாக விளையாடாதது குறித்து விமர்சனங்களை சந்தித்து வருவதை சுட்டிக் காட்டியுள்ள கோலி, இந்த சூழலில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவருக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.
இந்திய டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரையில் சத்தீஸ்வர் புஜாரா மற்றும் அஜிங்க்யா ரஹானே இருவரும் முக்கியமான வீரர்கள என்று தெரிவித்துள்ள கோலி, தான் முன்னதாக இதுகுறித்து பேசியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் 4-வது போட்டியில் பும்ரா இல்லாததை தவிர்த்து பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவிற்கான போட்டிகளை வெற்றி பெறுவதில் மட்டுமே என் முழுகவனமும் உள்ளதாகவும் ஒரு வீரராகவும் கேப்டனாகவும் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து செயல்படுவதாகவும் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
