'கிரவுண்ட் சரி இல்லங்க...' பிட்ச் ரெடி பண்ணவங்கள காப்பாத்த கோலி இப்படி பேசுறாரா...?! - இங்கிலாந்து அணி கடும் விமர்சனம்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Issac | Feb 26, 2021 03:35 PM

இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் மைதானத்தின் பிச் குறித்து இங்கிலாந்து அணி வீரர்கள் மோசமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

England team bad comments about the pitch of the ground

நேற்று (25-02-2021) இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது (பகலிரவு) டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் 112/10 ரன்களுக்கு சுருண்ட நிலையில் அடுத்ததாகக் களமிறங்கிய இந்திய அணி 145 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.

அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து 81 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்து இந்திய அணிக்கு 48 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

பொதுவாக டெஸ்ட் போட்டி மூன்று நான்கு நாட்கள் நடைபெறும் நிலையில் தற்போது ஆல் அவுட் ஆகி மொத்தம் இரண்டு நாட்களில் டெஸ்ட் போட்டி நடந்து முடிந்துள்ளதால் மைதானத்தின் மீது விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேட்டி அளித்த விராட் கோலி, 'இந்த ஆடுகளம் பேட் செய்ய ஏதுவானதாக இருப்பினும் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதால் இரு அணி பேட்ஸ்மேன்களும் நிலைத்து நின்று விளையாடத் தவறிவிட்டனர்' எனத் தெரிவித்திருந்தார்.

கோலியின் இந்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் அலெஸ்டர் குக், 'பொதுவாக இந்திய மைதானங்கள் சுழலுக்குச் சாதகமாக இருப்பது போல தான் மொடேராவும் இருந்தது. ஆனால், எதிர்பார்த்ததைவிட அதிகமாகச் சுழன்றது. மைதானம் நல்ல முறையில் இருப்பதாகவும், பேட்ஸ்மேன்கள் சிறப்பான முறையில் விளையாடவில்லை எனவும் கோலி கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

விராட் கோலி, ஜோ ரூட் இன்னும் பலர் ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ளக் கூடியவர்களாக இருந்தாலும், அவர்களால்கூட நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. கோலி சொல்வது பிட்சை ரெடி பண்ணியவர்களைக் காப்பாற்றுவதற்கு பேசுவது போல இருக்கிறது, அப்படிப் பேசினாரா எனத் தெரிவில்லை' எனவும் சொக்குப்போடி வைத்தார் போல கூறியுள்ளார்.

குக் மட்டுமல்லாது ஸ்ட்ராஸ் பேசியபோது, 'குக் கூறிய கருத்துதான் எனது கருத்தும்கூட. ரூட் சுழற்பந்துகளுக்கு எதிராக அபாரமாக விளையாடக் கூடியவர். ஆனால் அவர் அடித்த ரன்கள் 19 தான். இதில் மூன்று முறை விக்கெட்டை இழக்கும் நிலையும் ஏற்பட்டது. கோலி மைதானத்தை ரெடி பண்ணியவர்களை காப்பாற்றத்தான் அப்படி பேசினார் என நினைக்கிறேன்' எனக் கூறினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. England team bad comments about the pitch of the ground | Sports News.