டெஸ்ட் மட்டுமில்ல ஒருநாள் போட்டியிலும் ‘அவர்’ விளையாட வாய்ப்பில்லையாம்.. சொந்த காரணங்களுக்காக விலகும் ‘ஸ்டார்’ ப்ளேயர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசொந்த காரணங்களுக்காக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்தும் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 4-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதுவரை நடந்து முடிந்த 3 டெஸ்ட் போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 4-வது டெஸ்ட் போட்டியில் டிரா அல்லது வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் என்பதால், இந்திய அணி வெற்றிபெற முனைப்பு காட்டி வருகிறது.
இந்த நிலையில் ஒருநாள் தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகியுள்ளதாக Cricbuzz ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே சொந்த காரணங்களுக்காக இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இருந்தும் பும்ரா விலகியிருந்தார். இந்த நிலையில் அடுத்து நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் அவர் பங்கேற்ற வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் புதிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே காயம் காரணமாக 3 மாதங்கள் பயிற்சி பெற்று வந்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி, யோ-யோ பிட்னஸ் டெஸ்டில் தேர்ச்சி பெறாததால், இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அவர் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
News Credits: Cricbuzz