‘கழுத்தில் ஸ்டெதஸ்கோப்’!.. ‘ஆனா பேச்ச பார்த்தா டாக்டர் மாதிரி தெரியலயே’.. இளைஞர் செஞ்ச காரியம்.. கையும் களவுமாக பிடித்த மக்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவை அரசு மருத்துவமனையில் டாக்டர் போல் நடித்து நோயாளிகளிடம் பணம் பறித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் போது அணியும் நீல நிற உடையும், கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பும் அணிந்துகொண்டு இளைஞர் ஒருவர் சுற்றி வந்துள்ளார். போலி அடையாள அட்டையுடன் வலம் வந்த அந்த இளைஞர், மருத்துவமனை கேண்டினில் போலி அடையாள அட்டையை காட்டி 2 நாள்களாக சாப்பிட்டு வந்துள்ளார்.
இதனை அடுத்து இன்று காலை தன்னை டாக்டர் எனக் கூறி, நோயாளிகளிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் பணம் தர மறுத்த நோயாளிகளை தகாத வார்த்தைகளால் திட்டயதாகவும் சொல்லப்படுகிறது. பேச்சு, உடல் மொழியைப் பார்த்தால் டாக்டர் போல தெரியவில்லையே என சந்தேகமடைந்த நோயாளிகளின் உறவினர்கள் சிலர், அந்த இளைஞரை பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலறிந்து விரைந்து வந்த பந்தய சாலை காவல் நிலைய போலீசார், பிடிபட்ட இளைஞரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், சென்னை வியாசர்பாடி அடுத்த அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த சாரங்கன் என்பதும், சென்னை, திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் டாக்டர் போல உடைந்து அணிந்து நோயாளிகளிடம் பணம் பறிக்க முயன்றபோது சாரங்கன் கையும் களவுமாக பிடிபட்டார். சாரங்கனிடமிருந்த ஒரு இருசக்கர வாகனம், 2 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.