யாரெல்லாம் என்கூட நிலவுக்கு ஃப்ரீயா வர்றீங்க...? 'உங்களுக்கு இருக்க வேண்டியது ஒண்ணே ஒண்ணு தான்...' - நாம நிலவுல இருந்து பூமிய பார்க்கலாம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்இலவச டிக்கெட் மூலம் நிலாவிற்கு செல்லும் வாய்ப்பை அறிவித்துள்ளார் ஜப்பானிய தொழிலதிபர்.
நிலாவிற்கு செல்லும் 'டியர் மூன்' என்ற திட்டத்தை விண்வெளி ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது.
அதன் தொடர்ச்சியாக மக்களை நிலவுக்கு அழைத்து செல்ல ஸ்டார்ஷிப் என்ற விண்கலத்தை தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது. மேலும் இந்த ஸ்டார்ஷிப் விண்கலத்தில் உலகம் முழுவதிலுமிருந்து 8 பேரை தேர்ந்தெடுக்க உள்ளதாக ஜப்பானிய தொழிலதிபர் மொய்சவா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து கூறிய எலான் மஸ்க், 'நிலவில் கால்பதிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பது போல பொது மக்களுக்கும் இருக்கும் என நினைக்கிறேன். அதனால், என்னுடன் மேலும் 8 பேரை அழைத்து செல்ல விரும்புகிறேன். விண்வெளிக்கு பயணிக்க விருப்பம் உள்ளவர்களும், விண்வெளிக்கு செல்பவர்களுக்கு உறுதுணையாக, உதவியாக இருப்பவர்களும் இந்த இலவச டிக்கெட்டுகளை தரவுள்ளேன். மேலும் இந்த ஸ்டார்ஷிப் பயணம் 2023ம் ஆண்டில் தொடங்கவுள்ளோம்' என குறிப்பிட்டுள்ளார்.