'இது ரொம்ப மோசமானது'... 'ஆரம்பமே இப்டி இருந்தா... 'கேப்டன் விராட் கோலி வருத்தம்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Aug 09, 2019 02:27 PM
இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையே ஆன முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது குறித்து பேசிய கோலி, ‘கிரிக்கெட்டில் மோசமான விஷயம் இது தான்’ எனக் கூறி இருக்கிறார்.

கரீபிய தீவுகளில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. கடந்த புதன்கிழமையன்று, இந்திய - மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான, முதல் ஒருநாள் போட்டி மழையால், சுமார் 2 மணி நேரம் தாமதமாக துவங்கியது. இதனால் ஓவர்கள் குறைக்கப்பட்டு 43 ஓவர்களாக போட்டி நடைபெற இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 5.4 ஓவர்கள் ஆடிய நிலையில் மீண்டும் மழை வந்தது. பின்னர், போட்டி 34 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடந்து வந்த போது, 13 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மீண்டும் மழை வந்தது. இதை அடுத்து போட்டி கை விடப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் கோலி, ‘கிரிக்கெட்டில் மோசமான விஷயம் இது தான். தொடரின் தொடக்கத்திலேயே போட்டி நிற்பது நல்லது கிடையாது. ஒன்று போட்டியினை முழுமையாக அட வேண்டும், இல்லை என்றால் ஆரம்பத்திலேயே நிறுத்திட வேண்டும். ஏனென்றால் இதுபோன்ற போட்டிகளில் வீரர்கள் காயம் ஏற்பட்டால், அது அவர்களுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். வீரர்கள் பிட்டாகவும், நல்ல திறனோடும் இருக்க வேண்டும்.
அதுவும் வெஸ்ட் இண்டீசில் உள்ள மைதானங்களில் உண்மையிலேயே அவர்களுடைய திறமையையும் உடற்தகுதிகளையும் சோதிக்கும். ஏனெனில் இங்குள்ள மைதானங்கள், நல்ல வேகத்தையும் கூடுதல் உயரத்தையும் கொண்டிருக்கும். எனவே போட்டிகள் முழுமையாக நடை பெறுவது நல்லது. இருப்பினும் இந்த தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடும்’ என்று கோலி கூறினார்.
