‘இரண்டு கிங்குகளும் சேர்ந்து’...'பிசிசிஐ வெளியிட்ட டீசர்'... 'எதிர்பார்ப்பில் ரசிகர்கள்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Aug 21, 2019 08:30 PM
விராட் கோலி மற்றும் விவியன் ரிச்சர்ட்ஸ் கலந்துகொள்ளும் நேர்காணல், வியாழக்கிழமையன்று பிசிசிஐ டிவி என்ற தளத்தில் ஒளிபரப்பாக உள்ளதாக பிசிசிஐ ட்வீட் செய்துள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
![Virat, Richards Come Together For A Special Interaction Virat, Richards Come Together For A Special Interaction](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/virat-richards-come-together-for-a-special-interaction.jpg)
இந்திய கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் ஆகிய இரண்டையும் இந்திய அணி கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வியாழக்கிழமை முதல் துவங்க உள்ளது. இந்த தொடரின் முன்னதாக விராட் கோலி மற்றும் விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகிய இருவரும் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதனை விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘With the biggest BOSS’ என்று பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் விராட் கோலி மற்றும் விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகிய இருவரும் ஒரு நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள போவதாகவும் அதனை பிசிசிஐ டிவியில் ஒளிபரப்ப இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வியாழக்கிழமை அந்த சிறப்பு நேர்காணல் ஒளிபரப்பப்பட உள்ளது. இதில் ஆன்டிகுவாவின் கிங் விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் இந்தியாவின் கிங் கோலி ஆகிய இருவரும் பங்கேற்க உள்ளனர். இதனை முழுவதுமாக காண பிசிசிஐ டிவியை காணுங்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே விவியன் ரிச்சர்ட்ஸ் விராட் கோலி குறித்து ஒருநாள் தொடரில் வர்ணணை செய்யும் போது, ‘என்ன ஒரு வீரர். என்ன ஒரு சிறப்பான ஆட்டம் நான் விளையாடும் போது இவரை போன்ற ஒரு நாள் விளையாடும்போது மகிழ்ச்சி அடைந்திருப்பேன்’ என்று பாராட்டு தெரிவித்து இருந்தார்.
We have a very special interaction 🎥 lined up tomorrow ft. King of Antigua, Sir @ivivianrichards and our very own #KingKohli @imVkohli. Stay tuned for the full interview on https://t.co/Z3MPyesSeZ😍🏖️ #WIvIND pic.twitter.com/rMJn2a7Saa
— BCCI (@BCCI) August 21, 2019
![](https://www.behindwoods.com/images/spacer.gif)