'புதிய ஜெர்சியுடன் களமிறங்கும் இந்திய அணி'... 'வைரலாகும் விராட் கோலியின் புகைப்படம்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Aug 21, 2019 01:21 PM
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் புதிய ஜெர்சியுடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரானப் போட்டியில், இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரை வென்றது. இதையடுத்து வரும் வியாழக்கிழமை, துவங்கவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தப் போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் பகுதியாக உள்ளது. இதில் களமிறங்கும் இந்திய அணி ஜெர்ஸியில், பெயர் மற்றும் எண் இடம்பெற்றுள்ளது. முன்னதாக இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிக்கு எதிராக நடந்துவந்த பயிற்சி போட்டியில் புதிய ஜெர்சியுடன் களமிறங்கினாலும், முதன்முதலாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் புதிய ஜெர்சியுடன் களமிறங்க உள்ளனர்.
இதற்கு முன்னதாக டெஸ்ட் ஜெர்சிகளில் வீரர்களின் பெயர், எண் ஆகியவை இடம்பெற்றது இல்லை. முன்பக்கம் மட்டும் வீரர்களின் டெஸ்ட் எண் மட்டுமே இடம்பெற்றிருக்கும். தற்போது இந்த வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆஷஸ் தொடர் முதல் புதிய மாற்றங்களில் டெஸ்ட் ஜெர்சி பயன்படுத்தப்படுகிறது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அணியப்படும் ஜெர்சிகளைப் போன்று வீரர்களின் பெயர் மற்றும் எண் பின்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
டெஸ்ட் போட்டிக்கென இருக்கும் சில தனித்துவத்தை குலைக்கும் முயற்சி என்று சில முன்னாள் வீரர்கள் இந்த மாற்றத்துக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தனர். எனினும், காலத்திற்கு ஏற்றது போல மாற்றங்கள் செய்தால்தான் டெஸ்ட் போட்டியை ரசிகர்களுக்கு சுவாரஸ்யமாக கொண்டு சேர்க்க முடியும் என்றும் கருத்துக்கள் கூறப்பட்டது. பயிற்சி ஆட்டத்தில் பங்குபெறாத விராட் கோலி, டெஸ்ட் போட்டியில் பெயர் மற்றும் எண் இடம் பெற்ற ஜெர்சியுடன் காணப்படும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
