ஹர்திக் பாண்டியா முன்ன மாதிரி இல்லங்க...! தயவு செஞ்சு இனிமேல் 'என்னோட' அவர கம்பேர் பண்ணாதீங்க...! - முன்னாள் வீரர் காட்டம்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஹர்திக் பாண்டியா முதன்முதலில் இந்திய அணியில் விளையாடிய புதிதில் ஹர்திக் பாண்டியாவிற்கு பேட்டிங்கில் கபில் தேவ் அவர்களின் ஜாடை இருந்தது எனக் பலரும் கூறினர்.

ஹர்திக் பாண்டியா தன்னுடைய முதல் கிரிக்கெட் தொடரில் அதிரடியாக ஆடி அனைவரது கவனத்தையும் பெற்றார். அதோடு, நல்ல பீல்டிங், அதிரடி பேட்டிங், பவுலிங் என்று பாண்டியா அசத்தினார். தென் ஆப்பிரிக்கா தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் 95 பந்துகளில் 93 ரன்கள் விளாசி தள்ளினார்.
ஆனால், இப்போதோ பாண்டியாவின் பெயர் கிரிக்கெட் தொடரின் மூலம் வைரலாவதை விட, சர்ச்சைகளில் சிக்கி வைரலாகி வருகிறார். அவருக்கு கிரிக்கெட்டை விட வேறு சில விஷயங்கள் பெரிதாகி விட்டதாகவே போல நடந்து கொள்கிறார்.
கடந்த 2018 தொடரில் அதே டெஸ்ட்டுக்குப் பிறகு 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாண்டியா அவுட் ஆனார். அதோடு 2வது இன்னிங்சில் பாண்டியா ஒரு மோசமான ரன் அவுட். பாண்டியா மட்டையை தரையில் வைக்கவில்லை, கிரீசுக்குள் வைக்கவில்லை. தூக்கியபடியே மட்டை இருந்தது.
இதனால் கடுப்பான கபில் தேவ் கடுப்பாகி ஏபிபீ நியூஸ் சேனலில் பாண்டியாவை வறுத்து எடுத்தார். 'பாண்டியா முன்பு போல் இல்லை. சில்லித்தனமாக தவறுகள் செய்து கொண்டிருந்தால் அவர் என்னுடன் ஒப்பிடப்படுவதற்கு தகுதியானவர் அல்ல.
அவரிடம் நிறைய திறமைகள் உள்ளதை முதல் டெஸ்ட் போட்டியில் காட்டினார். ஆனால் அவர் மனரீதியாக சரியான அணுகுமுறையை வளர்த்தெடுத்துக் கொள்ள வேண்டும்' என கபில் தேவ் கூறினார்.

மற்ற செய்திகள்
