"இனி அவர 'டெஸ்ட்' மேட்ச்'ல பாக்குறது 'கஷ்டம்' தான் போல.. இதுனால தான்'ங்க அப்டி சொல்றேன்.." 'முன்னாள்' வீராரின் கருத்தால் எழுந்த 'பரபரப்பு'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமுதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளது.
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள இந்த போட்டி, ஜூன் மாதம் 18 முதல் 22 தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு பிறகு, வரும் ஆகஸ்ட் மாதம், இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி பங்கேற்கவுள்ளது.
இது இரண்டுக்கும் சேர்த்து, இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருந்த நிலையில், சில வீரார்கள் இந்த தொடருக்காக தேர்வு செய்யப்படாதது, கிரிக்கெட் பிரபலங்கள் மத்தியில், கேள்விகளை எழுப்பியுள்ளது. இதில், ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா (Hardik Pandya), இந்திய அணியில் இடம்பெறவில்லை. ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வரும் ஹர்திக் பாண்டியா, கடந்த சில டெஸ்ட் தொடர்களிலும் இந்திய அணிக்காக தேர்வாகவில்லை.
ஹர்திக் பாண்டியா பந்து வீசாமல் இருப்பதே, இதற்கான காரணமாக பார்க்கப்படுகிறது. 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அவரது கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு, நடைபெற்ற இரண்டு ஐபிஎல் தொடர்களிலும் ஹர்திக் பாண்டியா பந்து வீசவில்லை. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியிலும், அவர் சில ஓவர்கள் மட்டுமே பந்து வீசினார்.
இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா (Aakash Chopra), 'டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ஹர்திக் பாண்டியா இல்லையென்றால் பரவாயில்லை. ஆனால், அதன் பிறகு நடைபெறவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், அவர் சேர்க்கப்படவில்லை. இதன் காரணமாக, ஹர்திக் பாண்டியா இனி நீண்ட காலம், டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்றே தோன்றுகிறது.
நாங்கள் அனைவரும், ஹர்திக் பாண்டியா டெஸ்ட் தொடரில் இடம்பெறுவர் என நினைத்தோம். ஏனென்றால், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா போன்ற இடங்களில், அவரது பந்து வீச்சு நிச்சயம் தேவைப்படும். ஆனால், அவர் பந்து வீச்சில் தற்போது பிரச்சனை உள்ளது.
அவர் இங்கிலாந்து தொடரில் பந்து வீசாதது குறித்து பேசிய கோலி, அவருக்கு அதிக பணிச்சுமை கொடுக்க விரும்பவில்லை என்றும், அவரை டெஸ்ட் கிரிக்கெட்டிற்காக பயன்படுத்தவுள்ளோம் என்றும் கூறியிருந்தார்' என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
ஹர்திக் பாண்டியாவின் பந்து வீச்சில் பிரச்சனை இருப்பதால் தான், அவர் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து இடம்பெறாமல் போவது குறிப்பிடத்தக்கது.