கிரிக்கெட்ல 'பணம்' தரலன்னா 'யாரு' விளையாடுவா சொல்லுங்க...? எனக்கு 'சான்ஸ்' கிடைக்கலன்னா 'பெட்ரோல் பம்ப்'ல வொர்க் பண்ணிட்டு இருந்துருப்பேன்...! - இந்திய வீரர் காட்டம்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகிரிக்கெட் வீரர்களுக்கு பணம் கொடுக்கக்கூடாது என்பது என்ற பொது கண்ணோட்டம் தவறானது என இந்திய அணியின் ஆல்ரவுண்டர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா Cricket Monthly என்ற ஊடகத்திற்கு கிரிக்கெட் விளையாட்டில் பணம் எந்த அளவு முக்கியமானது எனவும், அது கிரிக்கெட் விளையாட்டையே எந்த அளவு மாற்றியுள்ளது என்பது குறித்து கூறியுள்ளார்.
அந்த பேட்டியில், 'கிரிக்கெட் விளையாட்டில் எந்த அளவு பணம் விளையாடுகிறது என எனக்கும் குருணால் பாண்ட்யாவும் நன்றாக தெரியும். கிரிக்கெட் அதிகளவில் பணம் கிடைக்கும் என்பதால் மட்டும் நாங்கள் இங்கு இல்லை.
அதோடு, பணம் உள்ளதென நாங்கள் எப்போதும் பறப்பதற்கு ஆசைப்பட்டதில்லை. எங்கள் கால்கள் எப்போதும் தரையிலேயே இருக்கின்றது. பணம் இல்லாமலும் நம்மால் வாழ முடியாது.
பணம் இந்த உலகில் அதிக மாற்றங்களை செய்யும். அதற்கு நானே உதாரணம். கிரிக்கெட் விளையாட்டில் பணம் கிடைக்கவில்லை என்றால் நான் இந்நேரம் ஏதோ ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்துக்கொண்டு இருப்பேன்.
நான் சொல்வது சிரிப்பதற்காக இல்லை. எனக்கு என் குடும்பம் மிக முக்கியம். என் குடும்பத்தை நான் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். அவர்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்ற வேண்டும். அதற்கு பணம் முக்கியம்.
கடந்த 2019-ஆம் ஆண்டில் ஒரு மூத்த வீரருடன் உரையாட நேர்ந்தபோது அவர் இளம் வீரர்களுக்கு பணம் கொடுக்க கூடாது எனக் கூறினார். இந்த கருத்தை நான் முழுமையாக எதிர்க்கிறேன். கிராமத்தில் இருந்து வரும் ஒரு வீரருக்கு பணம் மிகவும் முக்கியமானது.
அவருக்கு அந்த பணம் தேவைப்படாவிட்டாலும் அவரின் பெற்றோருக்கு தேவைப்படும். கிரிக்கெட் விளையாட்டை தொடங்கும் ஒரு வீரருக்கு பணம் உந்துதல் சக்தியாக இருக்கும். அவர் மேலும் மேலும் சிறப்பாக விளையாட பணமே காரணமாக அமையும்.
ஒரு வேளை கிரிக்கெட் விளையாட்டில் பணம் இல்லையென்றால் எத்தனை பேர் இந்த விளையாட்டில் தொடர்ந்து ஈடுபடுவார்கள் எனத் தெரியவில்லை. நம் சமுதாயத்தின் பொது புத்தியில் விளையாட்டில் ஈடுபடுபவர்கள் பணத்தை பற்றி சிந்திக்க கூடாது என்ற எண்ணம் இருக்கிறது. என்னை பொறுத்தவரை அது ஒரு தவறான கண்ணோட்டம்' எனக் கூறியுள்ளார்.