மனசுல நின்னுட்டீங்க ‘தல’.. ‘இது ஒன்னு போதும் நீங்க யாருனு சொல்ல’.. புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jun 06, 2019 12:21 PM

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி முடிந்த பின்னர் ரோஹித் ஷர்மாவுக்கு மரியாதை கொடுத்து தோனி பின்னே நின்ற வீடியோ இணையத்தில் வெளியாகி பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

WATCH: MS Dhoni gesture towards Rohit Sharma after Team India beat SA

உலகக்கோப்பைத் தொடரின் முதல் லீக் சுற்றில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியைப் பொறுத்தவரை பும்ரா, புவனேஷ்வர்குமார் மற்றும் சஹால் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தினர். இதில் தென் ஆப்பிரிக்காவின் 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

தென் ஆப்பிரிக்காவை பொறுத்தரை வேகப்பந்து வீச்சாளர் ரபாடா பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார். இந்த உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து 3 தோல்விகளை தென் ஆப்பிரிக்கா சந்தித்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணியில் டேல் ஸ்டெய்ன் மற்றும் லுங்கி நிகிடி இல்லாதது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியுடனான வெற்றிக்கு பிறகு மைதானத்தில் இருந்து வெளியே செல்லும் போது ரோஹித் சர்மாவை முன்னே செல்லுமாறு தோனி கூறிய வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்போட்டியில் ரோஹித் ஷர்மா 122 ரன்கள் அடித்து அணியின் வெற்றி உதவினார். மேலும் இந்த உலகக்கோப்பைத் தொடரின் முதல் சதத்தை ரோஹித் ஷர்மா அடித்து இந்திய அணிக்கு பெருமை தேடிதந்துள்ளார்.

Tags : #ICCWORLDCUP2019 #MSDHONI #MENINBLUE #CWC19