ரெண்டு பேருக்குள்ள இருக்க 'பிரச்சினை' வெட்ட வெளிச்சமாக்கிருச்சு... கேப்டனை மறைமுகமாக சாடிய துணை கேப்டன்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று நடைபெற்ற பஞ்சாப்-பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தியது. குறிப்பாக அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 132 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

ராகுல் கொடுத்த இரண்டு எளிதான கேட்சுகளை கேப்டன் கோலி கோட்டை விட்டார். அதையடுத்து சுமார் 60 ரன்கள் குவித்து ராகுல் மிரட்டி விட்டார். ராகுலின் இந்த ஆட்டத்தை பார்த்த அனைவரும் அடுத்த இந்திய கேப்டன் என அவரை புகழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் தற்போதைய துணை கேப்டனும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மா, ராகுலை பாராட்டி போட்ட ட்வீட் ஒன்று ட்விட்டரில் வைரலாகி வருகிறது. அதில் அவர், ராகுலின் செஞ்சுரியை பாராட்டி இருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் மேட்ச் முடியும்வரை கூட உங்களுக்கு பொறுமை இல்லையா? என ரோஹித்தை நோக்கி கேள்வி எழுப்பினர்.
ஏனெனில் அவர் ட்வீட் செய்த நேரம் விராட் 1 ரன்னில் அவுட் ஆகி இருந்தார். இதனால் தான் ராகுலை பாராட்டுவது போல மறைமுகமாக அவர் விராட்டை கிண்டல் செய்வதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் கடந்த ஆண்டு ரோஹித்-விராட் இடையில் பிரச்சினை இருப்பதாக தகவல்கள் வெளியானது. தற்போது ராகுலை, ரோஹித் பாராட்ட அவர் விராட் கோலியை கிண்டல் செய்வதாக ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
Exact moment whn kohli got out 🤭🤭🤭🤭 https://t.co/Vq294vZ3Xl
— Niki (@Niki_naughty2) September 24, 2020
Tweet Timing
Well played Rohit 😂😂😂#IPL2020 https://t.co/pbZ3ueloyI
— Captain (@iEatCricket) September 24, 2020
Look who is trolling Virat kohli 😉 #rcbvskxip #KXIPvsRCB #IPL2020 https://t.co/94TNBobXcd
— Sunshine (@Ahigh_flier) September 24, 2020
He couldn't even wait for the match to finish... https://t.co/3aXFCXDKN0
— nirzara (@virushkastan_x) September 24, 2020

மற்ற செய்திகள்
