"அவசரப்படாதீங்க... அவர் பேட்ட புடிச்சு பல நாள் ஆகுது.. பெஸ்ட்ட பாக்கணும்னா வெயிட் பண்ணுங்க!".. கேப்டனுக்கு ஆதரவாக களமிறங்கிய தலைமை பயிற்சியாளர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பல மாதங்கள் கழித்து களத்திற்கு விளையாட வந்துள்ளதாக அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் பேசியிருக்கிறார்.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்த நிலையில் சென்னை அணியின் தோல்விக்கு 7வது ஆர்டரில் களமிறங்கிய முடிவு, பேட்டிங் என பல்வேறு விமர்சனங்களை தோனி எதிர்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தோனிக்கு ஆதரவாக் குரல் கொடுத்துள்ளார். அதில், “வருடாவருடம் தோனி குறித்து இப்படியான தவறாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் தோனி களமிறங்கிய போது 14 ஓவர்கள் வீசப்பட்டிருந்தன. அதன் பின் தோனி களத்துக்கு வந்தாலும், அவர் பேட்டிங் செய்து பல நாட்கள் ஆகின்றன.
பல நாட்களாகவே அவர் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை. எனவே தோனியின் சிறந்த ஆட்டத்தை பார்க்க இன்னும் சில நாட்கள் ஆகலாம். பலரது ஆர்வத்தை பூர்த்தி செய்யும் அவரது சிறப்பான ஆட்டம் விரைவில் நிகழும். அதுவரை காத்திருக்கலாம். ராஜஸ்தானுக்கு எதிராக சென்னை அணி ஆடிய கடைசி போட்டியில் கூட தோனி நன்றாக ஆடினார். அணியில் பேட்டிங் அணியில் நன்றாகவே இருக்கிறது. பவுலிங்தான் சற்று மோசமாக உள்ளது.
கரன் அதிரடியாக ஆடி ரன் ரேட்டை நேற்று உயர்த்த காரணமாக இருந்தார். நல்ல ஹிட்டராக அவர் இருக்கிறார் தோனி போக போக ஆடுவார் என்று பிளமிங் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
