49 ரன்ன வாரி வழங்கி... டீமை தோக்க வச்சதுக்கு '1 லட்சம்' பரிசா?... கடுப்பான ரசிகர்கள் 'மீம்ஸ்' போட்டு கிண்டல்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா அணியால் 15.5 கோடிக்கு எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் பேட் கம்மின்ஸ் நேற்று நடைபெற்ற போட்டியில் 49 ரன்களை வாரி வழங்கினார். இதனால் அவரை ஏன் எடுத்தீர்கள்? என ரசிகர்கள் கொல்கத்தா அணி உரிமையாளர் ஷாரூக்கானிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் போட்டிக்கு பின் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் பேட் கம்மின்ஸ்க்கு 1 லட்ச ரூபாய்க்கான செக் வழங்கப்பட்டது. 12 பந்துகளில் 33 ரன்களை அடித்ததற்காக அவருக்கு ஆல்ட்ரோஸ் சார்பில் இந்த செக் வழங்கப்பட்டு இருக்கிறது. பவுலிங்கில் சொதப்பினாலும் பேட்டிங்கில் ஓரளவு கம்மின்ஸ் கைகொடுத்து இருக்கிறார்.
இதனால் வரும் போட்டிகளிலும் அவருக்கு கொல்கத்தா அணி நிர்வாகம் வாய்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அவர் 49 ரன்களை வாரி வழங்கியதை ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை. ஏனெனில் அதே 49 ரன்களில் தான் கொல்கத்தா அணி தோல்வியை தழுவியது. இதனால் கம்மின்ஸை வைத்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் கொடிகட்டி பறக்கின்றன.
#Cummins க்கு குடுத்த 15 கோடி ஊஊஊஊஊ 😂😂😂#MI #KKR pic.twitter.com/0tzeprqpis
— ℳя. வில்லங்கம் விПΣΣƬΉ (@vineethians) September 23, 2020

மற்ற செய்திகள்
