"சோதனை மேல சோதனை!..." 'அணியின் தோல்விக்குப் பின்'... 'முக்கிய வீரரும் தொடரிலிருந்தே விலகல்'... 'திடீரென வெளியான அறிவிப்பு!!!'
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

கடந்த 22ஆம் தேதி ஹைதராபாத் அணிக்கும், கோலி தலைமையிலான ஆர்சிபி அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் மிட்செல் மார்ஷ் 5வது ஓவரை வீசும்போது, கணுக்காலில் காயம் ஏற்பட்டு சுருண்டு விழுந்தார். பின்னர் அவர் தொடர்ந்து விளையாட முடியாமல் வெளியேற, அந்த ஓவரில் மீதிருந்த 2 பந்துகளை டேவிட் வார்னர் வீசினார்.
ஆனால் கடைசி நேரத்தில் சன்ரைசர்ஸ் அணிக்காக பேட்டிங் செய்யவும் மிட்செல் மார்ஷ் களமிறங்கினார். இருப்பினும் களத்தில் நின்ற மார்ஷால் பேட்டிங் செய்ய முடியவில்லை. இறுதியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியிடம் சன்ரைசர்ஸ் அணி தோல்வி அடைந்தது. அன்றைய போட்டியில் மிட்செல் மார்ஷ் பந்துவீசியும், பேட்டிங் செய்தும் இருந்தால் சன்ரைசர்ஸ் அணி வெல்வதற்கு வாய்ப்பு இருந்திருக்கும். இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியி்ட்டுள்ளது.
அதில், "சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் கணுக்கால் காயத்தால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக அணியில் மே.இ.தீவுகள் ஆல்ரவுண்டர் ஜேஸன் ஹோல்டர் விளையாட உள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் வரும் 26ஆம் தேதி நடக்க இருக்கும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் சன்ரைசர்ஸ் அணி மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.
🚨 Official Statement 🚨
Mitchell Marsh has been ruled out due to injury. We wish him a speedy recovery. Jason Holder will replace him for #Dream11IPL 2020 .#OrangeArmy #KeepRising
— SunRisers Hyderabad (@SunRisers) September 23, 2020

மற்ற செய்திகள்
