"இந்த தடுப்பூசிய ஒரு டைம் போட்டுகிட்டாலே போதும்... 60 ஆயிரம் பேர்கிட்ட பரிசோதனை!!!"... - 'பிரபல நிறுவனத்தின் நம்பிக்கை தரும் அறிவிப்பு!'...
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் பிரபல நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் ஒரு தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு முடிவு கட்ட இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு, அதன் சோதனை பல கட்டங்களாக நடந்து வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவின் பிரபல ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தார் ஒரு தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர். இந்த தடுப்பூசியை ஒருவருக்கு ஒரு முறை செலுத்தினால் போதுமானது எனக் கூறப்படுகிறது.
இதன் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, அர்ஜெண்டினா, பிரேசில், சிலி, கொலம்பியா, மெக்சிகோ, பெரு ஆகிய நாடுகளில் 60 ஆயிரம் பேருக்கு செலுத்தி சோதிக்கும் நடவடிக்கையை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் நேற்று தொடங்கியுள்ளது. முன்னதாக கொரோனா தடுப்பூசியை ஒன்றிற்கும் மேற்பட்ட முறைகள் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் பலமுறை எடுத்துக்கொள்ள வேண்டிய சூழல் கூட வரலாம் எனக் கூறப்பட்ட நிலையில், இந்த சோதனை முடிவுகள் வெற்றிகரமாக வந்தால் ஒருமுறை தடுப்பூசி போட்டுகொண்டாலே போதும் என்பது இங்கு முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியது.