"எல்லா டீம்லேயும் அவர கூப்பிடறாங்க... ஆனா, இந்த டீம் மட்டும் அவர கண்டுக்கவே மாட்டேங்கறாங்க!"... - இளம் வீரருக்கு ஆதரவாக கோபத்தில் கொதிச்ச பிரபல வீரர்!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் இளம்வீரர் புறக்கணிக்கப்படுவதாக முன்னாள் வீரர் மற்றும் பாஜக எம்பி கம்பீர் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நேற்றைய ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி போராடி தோல்வி அடைந்துள்ளது. அதிலும் நேற்று சென்னை அணியின் பவுலிங்கை சஞ்சு சாம்சன் மிகச் சிறப்பாக விளையாடினார். அனைத்து திசைகளிலும் சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் 9 சிக்ஸர்களுடன் 32 பந்துகளில் 74 ரன்களை குவித்தார். இதனால் இவர்தான் நேற்று சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கேம் சேஞ்சராகவும் இருந்தார்.
இந்நிலையில் தற்போது சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பாஜக எம்பி கம்பீர் களமிறங்கியுள்ளார். சென்னை மற்றும் ராஜஸ்தான் இடையேயான போட்டிக்குப்பின் இதுகுறித்து பேசியுள்ள கம்பீர், "சஞ்சு சாம்சன்தான் தற்போது இந்திய கிரிக்கெட் உலகின் பெஸ்ட் கீப்பர். அவர் பெஸ்ட் கீப்பர் மட்டுமல்ல சிறந்த பேட்ஸ்மேன். இந்திய கிரிக்கெட் உலகில் இருக்கும் இளம் வீரர்களில் அவர்தான் பெஸ்ட். இதை பற்றி என்னிடம் விவாதிக்க நினைப்பவர்கள் விவாதிக்கலாம்.
ஐபிஎல் போட்டிகளில் இருக்கும் பெரும்பாலான அணிகள் சஞ்சுவை எங்கள் அணிக்கு கொடுங்கள் என்று கேட்டு வருகிறார்கள். ஆனால் இந்திய அணியில் மட்டுமே அவரை எடுப்பது இல்லை. ஏன் இந்திய அணி மட்டும் அவரை அணியில் எடுக்க முனைவதில்லை என்று தெரியவில்லை" எனக் கோபமாகத் தெரிவித்துள்ளார். அதேநேரம் கம்பீர் மட்டுமின்றி இன்னும் பலரும் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக பேசி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
