VIDEO: டைவ் அடிச்சு இருக்கலாமே... முன்னணி வீரரை 'கெட்ட' வார்த்தையால் திட்டிய ஆல்ரவுண்டர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான போட்டியில் மும்பை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குறிப்பாக அந்த அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனும், கேப்டனுமான ரோஹித் சர்மா காட்டடி அடித்து கொல்கத்தா பவுலர்களை தண்டித்தார்.

கொல்கத்தா அணியால் 15.5 கோடிக்கு வாங்கப்பட்ட பேட் கம்மின்ஸ் 49 ரன்களை வாரி வழங்கினார். இதனால் கொல்கத்தா ரசிகர்கள் கண்ணீர் விடாத குறையாக சமூக வலைதளங்களில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அணியின் ஓனர் நடிகர் ஷாரூக்கானையும் மீம்ஸ் போட்டு தாளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் போட்டிக்கு நடுவே மும்பை அணியின் முன்னணி பவுலர் பும்ராவை, அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கெட்ட வார்த்தையால் திட்டிய வீடியோ தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பொல்லார்ட் வீசிய அந்த பந்தை இயான் மார்கன் அடிக்க அந்த பந்து எல்லைக்கோட்டை நோக்கி சென்றது. பும்ரா அந்த பந்தை தடுக்க முயற்சித்து தோல்வி அடைந்தார்.
— faceplatter49 (@faceplatter49) September 23, 2020
அதேபோல எல்லைக்கு அருகில் நின்றிருந்த ஹர்திக் பாண்டியாவும் ஓடிவந்து அந்த பந்தை தடுக்க முயற்சித்து தோல்வி அடைந்தார். கடைசியில் அந்த பந்து பவுண்டரி எல்லைக்கோட்டை தொட, 4 ரன்கள் கொல்கத்தா அணிக்கு கிடைத்தது. இதைப்பார்த்த ஹர்திக், பும்ராவை கெட்ட வார்த்தையால் திட்டி விட்டார்.

மற்ற செய்திகள்
