‘உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் இவர்தான்'... 'கேப்டன் விராட் கோலியை’.. ‘கலாய்த்து வறுத்தெடுக்கும் ரசிகர்கள்’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Oct 01, 2019 06:35 PM

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் செயலை ரசிகர்கள், கலாய்த்து ட்விட்டரில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Pant fans troll Kohli as indian captain picks Saha

முன்னாள் கேப்டனான தோனி டெஸ்ட் போட்டியில் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் அசத்தி  வந்தார். அவர் ஓய்வை அறிவித்தது முதல், டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பிங்கில் இந்திய அணியில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்நிலையில், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில், பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வரும் இளம் வீரரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பந்த் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக விக்கெட் கீப்பராக விருத்திமான் சாஹா சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கேப்டன் விராட் கோலி தெரிவிக்கையில், ‘சாஹா தற்போது நல்ல உடற்தகுதியுடன் இருக்கிறார். அவர் இந்த தொடரில் நம்முடன் விளையாடுகிறார். அவருடைய திறமைகளை அனைவரும் அறிவர். வாய்ப்புகள் கிடைக்கும்போதெல்லாம், பேட்டிங் திறமைகளையும் வெளிப்படுத்தியுள்ளார். காயம் காரணமாக அவர் விளையாடாமல் இருந்தது துரதிருஷ்டவசமானது. என்னைப் பொறுத்தவரை அவர்தான், உலகின் சிறந்த விக்கெட் கீப்பர்’ என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ரிஷப் பந்த் அணியிலிருங்து நீக்கப்பட்டதை அடுத்து, அவரது ரசிகர்கள் விராட் கோலியை கலாய்த்து வருகின்றனர். இதற்கு முன்புவரை, ரிஷப் பந்த் தான் இந்திய அணியின் எதிர்காலம் என்று விராட் கோலி கூறியதை நினைவுப்படுத்தி, அவரை ட்விட்டரில் வறுத்தெடுத்து வருகின்றனர். மேலும் தோனியின் ரசிகர்கள் வருத்தம்  தெரிவித்து வருகின்றனர்.