‘உண்மையில் அவருக்குக் காயம்தானா..?’ முன்னாள் வீரரின் ட்வீட்டால் ரசிகர்கள் சந்தேகம்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jul 01, 2019 07:02 PM

உலகக் கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியடைந்துள்ளது பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

INDvsENG Murali Kartik questions Vijay Shankar carrying drinks

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக அணியில் விஜய் சங்கர் சேர்க்கப்படாத நிலையில் அவருக்கு பதிலாக ரிஷப் பன்ட் விளையாடினார். முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதல்முறையாக விளையாடிய  விஜய் ஷங்கர் 2 விக்கெட்டுகளை சாய்த்து 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவருக்கு பவுலிங் வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் 41 பந்துகளில் 29 ரன்களை எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் கால் விரலில் ஏற்பட்ட காரணமாக  விஜய் சங்கர் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அணியில் சேர்க்கப்படவில்லை. ஆனால் அவர் போட்டியின்போது அணி வீரர்களுக்கு குளிர்பானம் கொடுக்க அடிக்கடி வந்தார். இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளி கார்த்திக், “விஜய் சங்கர் கால் விரலில் காயம் ஏற்பட்டிருப்பதால் அவர் விளையாட முடியவில்லை எனில் ஏன் அவர் குளிர்பானம் எடுத்துக்கொண்டு ஓடுகிறார். அந்த வேலையை செய்வதற்கு வேறு யாரும் இல்லையா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது காயம் முழுமையாக குணமடையாததால் விஜய் சங்கர் உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். ஷிகர் தவானுக்கு காயம் ஏற்பட்டபோது, ஸ்கேன் முடிவுகள் வர மூன்று நாட்களாகும், அதன்பிறகே அவர் போட்டியில் தொடர்வது குறித்து சொல்ல முடியும் எனத் தெரிவித்த பிசிசிஐ விஜய் சங்கர் விஷயத்தில் அவசரம் காட்டுவது ரசிகர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் சங்கருக்குப் பதிலாக விளையாட மய்னங் அகர்வால் அணியில் சேர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Tags : #ICCWORLDCUP2019 #INDVSENG #TEAMINDIA #VIJAYSHANKAR #MURALIKARTIK