'மிடில் ஆர்டர்'ல விளையாட இவர் தான் சரி'... 'ஜாக்பாட் அடிக்குமா'?... எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Jul 02, 2019 02:08 PM

உலகக்கோப்பை தொடரில் இன்று பங்களாதேஷ் அணியுடன் நடைபெறும் போட்டியில் அணியில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

India might look to rope in Ravindra Jadeja to strengthen middle order

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் இந்திய வீரர்களின் ஆட்டம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதனிடையே இன்று பங்களாதேஷ் அணியுடன் மோதும் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெரும் பட்சத்தில், அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும். இல்லையெனில் இலங்கையுடன் நடக்கும் போட்டியில் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். இதனால் இன்றைய போட்டி இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

இதற்கிடையே இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பீல்டிங் செய்யும் போது ஏற்பட்ட காயம், மற்றும் தொடர்ந்து பேட்டிங்யில் சொதப்பும் கே.எல்.ராகுல் இன்றைய போட்டியில் களமிறங்குவாரா என்பது சந்தேகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்று மிடில் ஆர்டரில் இந்திய அணி திணறி வருகிறது. இதனால் கேதர் ஜாதவிற்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்படலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

இதனிடையே ஈஎஸ்பிஎன் கிரிக்கெட் தளத்தில் இந்திய அணியில் யார் யாரெல்லாம் புதிதாக இடம்பெறுவார்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு பெரும்பாலான ரசிகர்கள் 11 பேர் கொண்ட அணி பட்டியலை பதிவிட்டுள்ளனர். அதில், பெரும்பாலும் ஜடேஜா, தினேஷ் கார்த்திக் பெயர்களே இடம்பெற்றுள்ளன. இதனால் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.