VIDEO: மச்சான் நான் 'படுத்துக்குறேன்'... நீ மிஸ் பண்ணிடாத... இதுக்கு பேருதான் 'டீம்' ஒர்க்கா?... 'தீயாய்' பரவும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇன்று விளையாடிய 4-வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி தோற்றாலும் அவர்களின் டீம் ஒர்க் மிகவும் பயங்கரமாக இருந்தது. ஒரு கட்டத்தில் இந்திய அணி இந்த போட்டியில் தோல்வியைத் தழுவும் என்றே அனைவரும் நினைத்தனர்.

ஆனால் கடைசிக்கட்டத்தில் எழுச்சி பெற்ற ஷர்துல் தாகூர், ராகுலுடன் கூட்டணி அமைத்து முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பினார். இதனால் மேட்ச் டிரா ஆனது. வழக்கம்போல சூப்பர் ஓவரைக்கண்டு நியூசிலாந்து அஞ்ச, இந்திய அணி எளிதாக வெற்றி பெற்று 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
Sodhi has 3 now! Top catch in the deep from Tom Bruce, after nearly colliding with Daryl Mitchell. India 87/5 after 11 overs. LIVE scoring | https://t.co/JButyDvUOT #NZvIND pic.twitter.com/oKFWLg1yKE
— BLACKCAPS (@BLACKCAPS) January 31, 2020
இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியின் சோதி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அபாரம் காட்டினார். குறிப்பாக 11-வது ஓவரின் முதல் பந்தை சோதி வீச இந்திய அணியின் சிவம் துபே சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு அந்த பந்தை தூக்கி அடித்தார். பந்து பவுண்டரி லைனுக்கு அருகில் செல்ல, டாம் புரூஸ் மற்றும் டேரில் மிட்செல் இருவரும் அந்த பந்தை பிடிக்க ஓடி வந்தனர்.
— Nishant Barai (@barainishant) January 31, 2020
இதைப்பார்த்த அனைவரும் அந்த கேட்சை இருவரும் மோதிக்கொண்டு விட்டு விடுவார்கள் என்றே நினைத்தனர். ஆனால் சமயோசிதமாக செயல்பட்ட மிட்செல் சட்டென கீழே படுத்துக்கொள்ள, புரூஸ் அந்த கேட்சை அபாரமாக பிடித்து 12 ரன்களில் இருந்த சிவம் துபேவை பெவிலியன் அனுப்பி வைத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
