'வேணும்னே'... 'இந்திய இளம் வீரரை'... 'புறங்கையால் இடித்த ஆஸ்திரேலிய வீரருக்கு'... 'ஐசிசியால் நேர்ந்த கதி'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jan 30, 2020 11:20 PM

தென் ஆப்பரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் வேண்டுமென்றே இந்திய வீரரை இடித்த ஆஸ்திரேலிய வீரருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Two demerit points for breaching ICC Code of Conduct

தென்னாப்பிரிக்காவில்  கடந்த செவ்வாய்கிழமை அன்று நடைபெற்ற  காலிறுதிப் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்த போது, 31-வது ஓவரின் முதல் பந்தில் ரன் எடுக்க ஓடிய சாம் ஃபான்னிங் , வேண்டுமேன்றே இந்திய பந்து வீச்சாளர் ஆகாஷ் சிங்கை முழங்கையால் இடித்தார். இதனால் அதிருப்தியடைந்த ஆகாஷ் சிங் இது குறித்து நடுவரிடம் முறையிட்டார்.

சாம் ஃபான்னிங்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வேண்டுமேன்றே ஆகாஷ் சிங்கை இடித்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து ஐசிசி விதிகளின்படி விதிமீறலில் ஈடுபட்ட சாம் ஃபான்னிங்கிற்கு 2.12 பிரிவின்படி 2 டீ மெரிட் புள்ளிகள் வழங்கப்பட்டன.   ஆஸ்திரேலிய அணியில் அன்று நடந்தப் போட்டியில் அதிக ரன்கள் (75 off 121) எடுத்த சாம் ஃபான்னிங் இப்படி நடந்துகொண்டது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எனினும், இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

 

Tags : #ICCWORLDCUP #ICC #SAM FANNING #AKASH SINGH #CRICKET