புதிய 'கேப்டனின்' கீழ் களமிறங்கிய நியூசிலாந்து அணி... இந்தியாவை வென்று 'சாதனை' படைக்குமா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Jan 31, 2020 12:29 PM

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 4-வது டி20 போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்யவிருக்கிறது.

IND Vs NZ: New Zealand win toss, opt to field against India

இந்த நிலையில் நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சனுக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இன்றைய போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். இதனால் நியூசிலாந்து அணி டிம் சவுத்தியின் தலைமையின் கீழ் இன்று களமிறங்கி உள்ளது.

அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்ல கடந்த போட்டியில் போராடிய கனே வில்லியம்சன் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் கவர்ந்து இருந்தார். தற்போது அவர் இல்லாமல் நியூசிலாந்து அணி களமிறங்கி இருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக அமையுமா? இல்லை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.