சொன்ன 'சொல்ல' காப்பாத்துறதுல... 'அவர' அடிச்சுக்க முடியாது... இளம்வீரர்களுக்கு வாய்ப்பளித்து 'ஓபனிங்' இறக்கி விட்ட கேப்டன்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Jan 31, 2020 01:09 PM

கடந்த போட்டியில் வென்று டி20 தொடரை கைப்பற்றியதற்கு பின் கண்டிப்பாக இளம்வீரர்களுக்கு அடுத்த போட்டியில் வாய்ப்பு வழங்கப்படும் என, கேப்டன் விராட் கோலி தெரிவித்து இருந்தார். அதேபோல இன்றைய டி20 போட்டியில் ஓபனிங் பேட்ஸ்மேன் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு கோலி வாய்ப்பளித்து இருக்கிறார்.

IND Vs NZ: Sanju Samson replaces Rohit Sharma in 4th T20

இதேபோல தமிழகத்தை சேர்ந்த இளம் பவுலர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோருக்கும் இன்றைய போட்டியில் கோலி வாய்ப்பளித்து இருக்கிறார். இதில் ஓபனிங் வீரராக இறங்கி அதிரடியாக விளையாடிய சாம்சன், ஸ்காட் குஜிலீன் வீசிய 2-வது ஓவரின் 3-வது பந்தில் சாண்ட்னர் மிட்செலிடம் கேட்ச் கொடுத்து 8 ரன்களில் வெளியேறி இருக்கிறார்.

எனினும் சஞ்சு சாம்சனுக்கு இன்னும் வாய்ப்புகள் வழங்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல ஒரே போட்டியில் 3 இளம்வீரர்களுக்கு கோலி வாய்ப்பளித்தற்கு  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த போட்டியில் சிறப்பாக ஆடி போட்டியை வெல்ல காரணமாக இருந்த ரோஹித் சர்மா, முஹம்மது ஷமி மற்றும் ஜடேஜா மூவருக்கும் இன்றைய போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் அடுத்த போட்டியில் கோலி ஓய்வு எடுத்துக்கொண்டு, ரோஹித்தை கேப்டனாக களமிறக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.