VIDEO: ஆட்டமிழந்த 'கேப்டன்'... கத்தி,கூச்சல் போட்டு 'வழியனுப்பிய' கோலி... ஐசிசி 'தடையில்' சிக்குவாரா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Mar 02, 2020 12:15 PM

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற ரீதியில் இழந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து அணி, 2-வது டெஸ்ட் போட்டியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்துள்ளது. இந்த தோல்வியின் வழியாக 8 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி ஒயிட் வாஷ் ஆகி மோசமான சாதனை படைத்துள்ளது.

IND Vs NZ: Kohli\'s Send off to Kane Williamson, Twitter Reacts

இந்த நிலையில் போட்டியின் போது இந்திய கேப்டன் விராட் கோலி நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சனை வழியனுப்பிய விதம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பும்ராவின் பந்துவீச்சில் கனே வில்லியம்சன்(3) ரன்களில் ரிஷப் பண்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதைக்கண்ட கோலி கத்தி, கூச்சல் போட்டு கொண்டாடினார்.

மேலும் வில்லியம்சன் வெளியேறும்போது வாயில் விரல் வைத்தும் அவர் சைகை செய்தார். இதைக்கண்ட ரசிகர்கள் ஒருவர் அவுட் ஆகி வெளியேறும்போது இப்படியா? அவரை வழியனுப்புவது என கோலியை விமர்சனம் செய்து வருகின்றனர். முன்னதாக தன்னுடைய 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய ராஸ் டெய்லர் விக்கெட் இழந்து வெளியேறிய போதும் கோலி இவ்வாறு தான் நடந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் ஐசிசி அவருக்கு தடை விதிக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. சமீப காலங்களில் எதிரணி வீரர் விக்கெட் இழந்து வெளியேறும் போது ஆக்ரோஷமாக கொண்டாடும் வீரர்களுக்கு ஐசிசி தடை விதிக்க ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோலியின் இந்த ஆக்ரோஷ வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.