கண்டிப்பா 'வெளையாடுவாரு' கவலைப்படாதீங்க... 'வெளிப்படையாக' பேசிய கோச்... யார சொல்றாருன்னு பாருங்க!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Feb 29, 2020 12:03 AM

இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று காலை 4 மணிக்கு கிறிஸ்ட் சர்ச்சில் நடைபெறுகிறது. இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தத்தில் விளையாடவிருக்கிறது.

IND VS NZ: Ravi Shastri reveals Prithvi Shaw’s fitness status

முன்னதாக இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் பிரித்வி ஷா இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பயிற்சியை தவற விட்டார். இதனால் அவருக்கு பதிலாக சுப்மன் கில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் பிரித்வி ஷா காயத்தில் இருந்து மீண்டு விட்டார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், '' பிரித்வி ஷா விளையாடத் தயாராக இருக்கிறார்,'' என்றார். முதல் இரண்டு இன்னிங்ஸ்களில் அதிரடியாக ஆடி விக்கெட்டை பறிகொடுத்த பிரித்வி ஷா இந்த போட்டியில் நிலைத்து நின்று ஆட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.