'ரூல்ஸை மீறிட்டாரு' ஐபிஎல் போட்டில 'அவரு' வெளையாட முடியாது... 'பிரபல' அணிக்கு 'செக்' வைத்த பிசிசிஐ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Feb 27, 2020 07:09 PM

ஐபிஎல் போட்டிகள் தொடங்கிட இன்னும் சரியாக 1 மாதம் மட்டுமே இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் போட்டிகளை காண காத்துக்கொண்டு இருக்கின்றனர். இந்த வருடம் கப்பை வென்றேயாக வேண்டும் என்ற கட்டாயத்தில் பெங்களூர், பஞ்சாப், டெல்லி அணிகள் களமிறங்க உள்ளன. மறுபுறம் சென்னை அணிக்கு மீண்டும் தோனி விளையாடவிருக்கிறார் என்பதால் சென்னை அணியின் ஒவ்வொரு போட்டியும் ரசிகர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

IPL 2020: 48 Year old Pravin Tambe disqualified from dournamnet

இந்த நிலையில் கொல்கத்தா அணியை சேர்ந்த 48 வயது பவுலர் பிரவீன் தாம்பே இந்த ஆண்டு அந்த அணிக்காக விளையாட முடியாது என ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்து இருக்கிறார். கடந்த    2018-ம் ஆண்டு ஷார்ஜாவில் நடைபெற்ற டி10 லீக் போட்டியில் பிரவீன் தாம்பே விளையாடினார். பிசிசிஐ விதிப்படி ஒரு வீரர் ஓய்வு பெற்றால் மட்டுமே வெளிநாட்டு கிரிக்கெட் லீக் போட்டிகளில் விளையாட முடியும். இந்த விதியை பிரவீன் மீறி விட்டதால் அவர் கொல்கத்தா அணிக்காக ஆட முடியாது என ஐபிஎல் நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா அணி பிரவீன் தாம்பேவை சுமார் 20 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஐபிஎல் போட்டிகளில் ஆடும் தகுதியை பிரவீன் தாம்பே இழந்து விட்டதால் அவருக்கு பதிலாக கொல்கத்தா அணி வேறு எந்த வீரரை எடுக்கப்போகிறது? என்பது கேள்விக்குறியாக உள்ளது. நடப்பு ஐபிஎல்லில் அந்த அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் தலைமையில் கொல்கத்தா அணி களமிறங்கவிருக்கிறது.