'காயம்' காரணமாக விலகும் 'முன்னணி' வீரர்?... அவரும் இல்லனா 'அவ்ளோ' தான் போல... பதறும் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Feb 28, 2020 01:08 PM

கணுக்கால் காயம் காரணமாக 2-வது டெஸ்டில் இருந்து முன்னணி பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா விலகியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Due to Ankle Injury Ishant Sharma ruled out of 2nd Test: Report

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக ரஞ்சி போட்டிகளில் விளையாடிய இஷாந்த் சர்மா கணுக்கால் காயம் காரணமாக ஓய்வெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. எனினும் கடைசிக்கட்டத்தில் பிளைட் புடித்து நியூசிலாந்து சென்ற இஷாந்த் சர்மா முதல் டெஸ்டில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனால் 2-வது டெஸ்டிலும் அவரது விக்கெட் வேட்டை தொடரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

இந்த நிலையில் தான் மீண்டும் கணுக்கால் காயம் காரணமாக 2-வது டெஸ்ட் தொடரில் இருந்து விலகி இருப்பதாக கூறப்படுகிறது. இது கேப்டன் கோலிக்கு மிகுந்த தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம். 2-வது டெஸ்டில் அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜாவை எடுக்கலாம் என்றிருந்த கோலி தற்போது என்ன செய்வது? யாரை எடுப்பது? என மிகுந்த குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறாராம். மோசமான பார்ம் காரணமாக பும்ரா விக்கெட் எடுக்க தவித்துக் கொண்டிருக்கிறார். ஷமியின் பந்துவீச்சும் அவ்வளவு நன்றாக இல்லை.

இப்படியொரு மோசமான சூழலில் இஷாந்த் சர்மா விலகுவது அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தக்கூடும். தற்போது இஷாந்துக்கு பதிலாக உமேஷ் யாதவ் அல்லது நவ்தீப் சைனி இருவரில் ஒருவரை கோலி எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக உமேஷை எடுக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஏனெனில் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பந்துவீச்சு பயிற்சியாளர் அருண் பரத் ஆகியோருடன் உமேஷ் உரையாடிய புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.

மறுபுறம் நவ்தீப் பேட்டிங்கிலும் கைகொடுப்பார். அவரது பந்துவீச்சும் சிக்கனமாக இருக்கும் என்பதால் நவ்தீப் உள்ளே வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. எனினும் கோலி யாரை எடுக்கப் போகிறார்? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதற்கிடையில் இஷாந்த் காயம் காரணமாக விலகும் செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவரும் இல்லையெனில் நியூசிலாந்து அணியை சமாளிப்பது மிகவும் கடினம் என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.