சீக்கிரமே 'ரிட்டர்ன்' டிக்கெட் போட்டுறலாம் கவலைப்படாதீங்க ... இந்திய அணியை 'வச்சு' செய்யும் நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Feb 28, 2020 11:33 PM

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாளை காலை 4 மணிக்கு கிறிஸ்ட் சர்ச்சில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் இந்த போட்டியில் கண்டிப்பாக வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

\'Spot the Pitch\' BCCI shares a Picture, Twitter Reacts

இந்த நிலையில் நாளை போட்டி நடைபெறவுள்ள ஆடுகளத்தின்(Pitch) புகைப்படத்தை பிசிசிஐ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. பச்சை பசேலென முழுவதும் ஆடுகளம் முழுவதும் புற்களுடன் காணப்படுகிறது. அவ்வளவு தான் இதைப்பார்த்த நெட்டிசன்கள் சிக்கி விட்டது கண்டெண்ட் என இந்திய அணியை வச்சு செய்து வருகின்றனர்.

குறிப்பாக சீக்கிரமே இந்திய அணி ரிட்டர்ன் டிக்கெட் போட்டு விடலாம் என்றும், இந்த ஆடுகளத்தை பார்த்தவுடன் பிரித்வி ஷாவுக்கு பயத்தில் காய்ச்சலே வந்திருக்கும் என்றும் கிண்டலடித்து வருகின்றனர். உச்சகட்டமாக 2-0 என்ற ரீதியில் இந்திய அணி தோற்கும் என ஆரூடம் கூட சொல்ல ஆரம்பித்து விட்டனர். ஆனாலும் இந்திய அணி இந்த போட்டியில் கண்டிப்பாக வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் வலுவாக இருக்கிறது. அது உண்மையாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.