என்ன ஆச்சு 'கோலிக்கு'... பேட்டிங்கில் தொடர்ந்து 'சொதப்பல்'... 21 போட்டிகளில் 'சதமே' இல்லை... 'தரவரிசைப்' பட்டியலிலும் 'பின்னடைவு'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Suriyaraj | Feb 29, 2020 11:49 PM

விராட் கோலி தொடர்ந்து 21 இன்னிங்ஸ்களாக மூன்று வகையான போட்டிகளிலும்  சேர்த்து சதம் அடிக்காமல் இருப்பதால் அவரது ஆட்டம் பொலிவிழந்து விட்டதாக அவரது ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

Indian captain virat kohli 21 innings without century

கிறைஸ்ட்சர்ச்சில் நடந்துவரும் நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பேட்டிங் சோகம் தொடர்ந்து வருகிறது.

களத்தில் இறங்கினால் நிச்சயம் அரை சதமாவது அடித்து விடுவார் என்ற நம்பிக்கையை ரசிகர்கள் மனதில் ஏற்படுத்தி வைத்திருந்தவர் கோலி. எதிர் அணியினரின் பந்து வீச்சை களங்கடிக்கும் திறமை படைத்தவர். எத்தகைய மோசமான நிலையிலும் அணியை ஒற்றை ஆளாக நின்று வழிநடத்தி வெற்றியை நோக்கி செல்லக் கூடிய திறன் படைத்தவர் கோலி.

ஆனால் கடந்த 21 இன்னிங்ஸ்களாக  அவரது ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது.  நியூஸிலாந்து தொடரில் 4 டி20 போட்டிகளில் 125 ரன்களும், 3 ஒருநாள் போட்டிகளில் சேர்த்து 75 ரன்களும் என மொத்தம் 200 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இதில் ஒரு அரை சதம் மட்டுமே அடங்கும். வெலிங்டனில் நடந்த முதல் டெஸ்டிலும் 2 மற்றும் 19 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். கிறைஸ்ட் சர்ச்சில் இன்று தொடங்கிய 2-வது டெஸ்டிலும் கோலி சொற்ப ரன்னில் ஆட்டமிழந்துள்ளார்.

மூன்றுவகையான கிரிக்கெட்டிலும் கடந்த 21 இன்னிங்ஸ்களாக விராட் கோலியின் ஆட்டம் மோசமாக இருந்து வருகிறது. இந்த போட்டிகளில் விராட் கோலி ஒரு சதம் கூட அடிக்கவில்லை.

அதுமட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலியை 10-வது முறையாகச் சவுதி ஆட்டமிழக்கச் செய்துள்ளார். கோலியை எப்படி ஆட்டமிழக்கச் செய்வது என்பதை புரிந்து கொண்டு சவுதி பந்து வீசுவதாலேயே அவரை தொடர்ந்து ஆட்டமிழக்கச் செய்கிறார் என ரசிகர்கள கூறுகின்றனர். கோலியை அதிகமான முறை ஆட்டமிழக்கச் செய்த வெளிநாட்டு வீரர் எனும் பெருமையையும் சவுதி படைத்துள்ளார்.

தொடர்ந்து பேட்டிங்கில் கோலி சொதப்பி வருவதால் ஐசிசி பேட்டிங் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு சரிந்தார். டி-20 போட்டியில் 9 வதுஇடத்திற்கு தள்ளப்பட்டார்.

Tags : #VIRATKOHLI #CRICKET #INDIAN CAPTAIN #21 INNINGS #WITHOUT CENTURY