‘நம்பிக்கையுடன்’ சொன்ன கேப்டன்... ‘அடுத்த’ நாளே பயிற்சியைத் ‘தவறவிட்ட’ இளம்வீரர்... 2வது டெஸ்ட்டில் யாருக்கு ‘வாய்ப்பு?’...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Feb 27, 2020 02:25 PM

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பிரித்வி ஷாவுக்கு பதிலாக ஷுப்மன் கில் விளையாட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

INDvsNZ Prithvi Shaw Skips Practice Shubman Gill Likely To Play

வெலிங்டனில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பிரித்வி ஷா சொதப்ப, அவருக்கு பதிலாக ஷுப்மன் கில்லை அணியில் சேர்க்க வேண்டும் எனக் குரல்கள் எழுந்தது. இதையடுத்து 2வது டெஸ்ட் போட்டியிலும் பிரித்வி ஷாவுக்கே வாய்ப்பு என கேப்டன் விராட் கோலி தெரிவித்திருந்தார். மேலும் அவர் விளையாடத் தொடங்கிவிட்டால் ஆட்டமே வேறு, அதற்கு அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் கோலி கூறியிருந்தார்.

இந்நிலையில் இடது காலில் ஏற்பட்டுள்ள வீக்கம் காரணமாக பிரித்வி ஷா வியாழக்கிழமை பயிற்சியை தவறவிட்டுள்ளார். 2வது டெஸ்ட் போட்டி நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இது இந்திய அணியினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், பிரித்வி ஷாவுக்கு வியாழக்கிழமை ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டு வீக்கத்துக்கான காரணம் கண்டறியப்படவுள்ளதாவும், முடிவு சாதகமாக வந்தால் வெள்ளிக்கிழமை அவர் பயிற்சியில் ஈடுபடுவார் எனவும் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை அவரால் விளையாட முடியாமல் போனால் அவருக்கு பதிலாக மயங்க் அகர்வாலுடன் இணைந்து ஷுப்மன் கில் தொடக்க வீரராக களமிறங்கலாம் எனக் கூறப்படுகிறது.

Tags : #CRICKET #VIRATKOHLI #INDVSNZ #TEAMINDIA #PRITHVISHAW #SHUBMANGILL