இப்பவே 'ஐபிஎல்' பிராக்டீஸ் ஆரம்பிச்சுட்டீங்க போல... கேப்டனை 'பங்கமாக' கலாய்க்கும் ரசிகர்கள்... என்ன காரணம்னு பாருங்க!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Jan 31, 2020 11:22 PM

இன்றைய டி20 போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்திய அணி இந்த டி20 தொடரை 4-0 என்ற ரீதியில் முன்னணி வகிக்கிறது. இன்று கேப்டன் கோலி துணிந்து பல முடிவுகளை எடுத்தார். சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளித்தது, நவ்தீப் சைனி, வாஷிங்டன் சுந்தர் இருவரையும் உள்ளே கொண்டு வந்தது என துணிச்சலான விஷயங்களை இறங்கி செய்தார்.

IND Vs NZ: 5 RCB players feature in playing XI squad

இந்த நிலையில் இன்றைய போட்டியில் கோலி, சிவம் துபே, நவ்தீப் சைனி, வாஷிங்டன் சுந்தர் மற்றும் யஷ்வேந்திர சாஹல் உள்ளிட்ட 5 ஆர்சிபி வீரர்கள் விளையாடவுள்ளதாக பெங்களூர் அணி பெருமையாக ட்வீட் செய்தது. இதைப்பார்த்த ரசிகர்கள் என்ன கேப்டன் இது இந்தியா அணியா? இல்லை உங்களின் ஆர்சிபி அணியா? என்றும், இப்பொழுதே ஐபிஎல் போட்டிகளுக்கு பிராக்டீஸ் செய்கிறீர்களா? என்றும் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

மற்றொரு தரப்பினரோ இளம்வீரர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கும் நோக்கில் தான் கோலி இப்படிப்பட்ட முடிவுகளை எடுக்கிறார் என்று அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நடுநிலையாளர்களோ எது எப்படியோ? இந்தியா வென்றால் சரிதான் என்று மையமாக கருத்து தெரிவித்துள்ளனர். கேப்டனோட இந்த டீம் செலக்ஷன் பத்தி நீங்க என்ன நெனைக்குறீங்க?