மொத்தமாக 'சொதப்பிய' இளம்வீரர்... அடுத்த மேட்சுல இந்த 'ரெண்டு' பேருக்கும் வாய்ப்பு இருக்கு... 'ரகசியத்தை' உடைத்த கோலி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Jan 29, 2020 11:29 PM

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற விதத்தில் கைப்பற்றி இருக்கிறது. இந்த நிலையில் இன்றைய மேட்சுக்குப்பின் கேப்டன் விராட் கோலி அளித்த பேட்டியில், '' ஒரு கட்டத்தில் மேட்ச் நம் கையை விட்டுப் போகிறது. ஆனால் இந்த வெற்றிக்கு நியூசிலாந்து தகுதியான அணிதான் என்று நான் எனது பயிற்சியாளரிடம் கூறினேன்.

IND Vs NZ: Kohli talks about India\'s \'Thrill\' Winning Moment

ஆனால், முக்கியமான கட்டத்தில் எங்களுக்கு விக்கெட் கிடைத்தது. ஷமி ஒரு அனுபவம் வாய்ந்த வீரர் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார். ஆஃப் ஸ்டெம்புகளுக்கு வெளியே தொடர்ந்து பந்து வீசினார். சூப்பர் ஓவரில் நியூசிலாந்து நெருக்கடி கொடுத்தது. ஆனால் ரோஹித் அற்புதமாக விளையாடினார். மொத்தத்தில் இன்றைய நாள் எங்களுக்கு ஒரு அற்புதமான நாளாகும்.

இந்த தொடரை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்று நினைக்கிறோம். அடுத்தடுத்த போட்டிகளில் சுந்தர், சைனி இருவருக்கும் வாய்ப்புகள் வழங்கப்படும்,'' என்றார். இன்றைய போட்டியில் வெறும் 3 ரன்களுக்கு அவுட் ஆன சிவம் துபே பந்துவீச்சிலும் ரன்களை வாரி வழங்கினார். இதனால் அவருக்கு பதிலாக மேற்கண்ட இரு வீரர்களுக்கும் வாய்ப்புகள் வழங்க கோலி முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.