VIDEO: இதுக்கு 'பீல்டிங்' பண்ணாமலேயே இருந்திருக்கலாம்... மூத்த வீரரால் 'நொந்து' நூடுல்ஸ் ஆன 'டெத்' பவுலர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்று, டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது. போட்டியை வென்றாலும் நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்களின் பீல்டிங் செம சொதப்பலாக இருந்தது. முஹம்மது ஷமி, ஜடேஜா, விராட் கோலி, கே.எல்.ராகுல் என அணியின் முக்கிய வீரர்கள் பலரும் மோசமாக பீல்டிங் செய்தனர்.

இதனால் எளிதாக வெல்ல வேண்டிய மேட்சை இந்தியா கடினமாக போராடி வென்றது. இதில் அதிகம் நொந்து நூடுல்ஸ் ஆனவர் டெத் ஸ்பெஷலிஸ்ட் என புகழப்படும் பும்ரா தான். சூப்பர் ஓவரையும் சேர்த்து 5 ஓவர்கள் வீசிய பும்ரா 1 விக்கெட் கூட எடுக்காமல் 60 ரன்களுக்கும் மேலாக விட்டுக்கொடுத்தார். டெத் ஸ்பெஷலிஸ்ட் என புகழப்படும் பும்ரா இன்று அதிகபட்ச ரன்களை விட்டுக்கொடுத்தது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெருத்த விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
— Nishant Barai (@barainishant) January 29, 2020
இந்த நிலையில் ஷமியின் மோசமான பீல்டிங்கை பார்த்து களத்தில் பும்ரா அதிருப்தியை வெளிப்படுத்திய வீடியோ தற்போது வேகமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இன்றைய போட்டியில் 3-வது ஓவரை பும்ரா வீசினார். 2-வது பந்தை எதிர்கொண்ட குப்தில் அதை பின்னால் தூக்கியடித்தார். அப்போது தேர்ட் மேன் பகுதியில் நின்றிருந்த ஷமி ஓடிவந்து அந்த பந்தை வலது கையால் பிடிக்க முயன்றார். ஆனால் பந்து அவரது கைகளில் சிக்காமல் சிக்ஸருக்கு பறந்தது. ஷமி ஒரு டைவ் அடித்து அந்த கேட்சை பிடித்து இருந்தால், குப்திலை வெளியேற்றி இருக்கலாம். ஆனால் ஷமி அவ்வாறு முயற்சி செய்யவில்லை.
அவரின் மோசமான பீல்டிங்கை பார்த்த பும்ரா அதிருப்தி அடைந்து தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினார். இதேபோல பும்ரா வீசிய 10-வது ஓவரின் 3-வது பந்தில் சாண்ட்னர் கொடுத்த கேட்சை ஜடேஜா நழுவவிட்டார். அடுத்தடுத்து 2 கேட்சுகளை வீரர்கள் நழுவ விட்டதால் பும்ராவால் இன்றைய போட்டியில் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாமல் போய் விட்டது. எனினும் கடைசி ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை பறித்து இந்திய அணியின் வெற்றிக்கு ஷமி வழிவகுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
