போன வருஷம் ஃபுல்லா இந்த சைட்களை பாத்தவங்கதான் அதிகமாம்!'.. காட்டிக்கொடுத்த 'கூகுள்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | May 10, 2019 04:12 PM

இந்தியாவில் ஆன்லைனில் திருமண வரன் தேடுபவர்களை விட டேட்டிங் செல்வதற்கான இணையதளங்களை தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Online dating search grows faster than matrimony queries in India

இந்தியாவில் 2017-ம் ஆண்டை விட 2018-ம் ஆண்டில் ஆன்லைனில் டேட்டிங் தொடர்பான தகவல்களை ஆர்வமாக தேடுபவர்கள் எண்ணிக்கை 40 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக கூகுள் கூறியுள்ளது. கூகுள் இணையதளத்தில் மட்டும் 37 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் டேட்டிங் தொடர்பான வெப்சைட்டுகளில் தகவல்களை தேடிப்பார்த்துள்ளனர்.

இதே காலக்கட்டத்தில் ஆன்லைனில் திருமண வரன் தேடுபவர்களின் எண்ணிக்கை 13 சதவிகிதம் மட்டுமே உயர்ந்துள்ளது. எவ்வளவு பேர் டேட்டிங் தகவல்களை தேடிப்பார்த்தனர் என்ற எண்ணிக்கையை கூகுள் நிறுவனம் தெரிவிக்கவில்லை. என்றாலும் திருமண வரன் தேடுபவர்களை விட டேட்டிங் செல்வதற்கான இணையதளங்களை தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மட்டும் தெரியவந்துள்ளது.

கூகுள் நிறுவனத்தின் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மேட்ரிமோனி வெப்சைட்டில், கடந்த பிப்ரவரி மாதத்தில் ஜோடியை தேடிய 6 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தி உள்ளனர். இதில் 24 சதவிகிதம் பேர் காதலை வார்த்தைகளால் வெளிப்படுத்த விரும்புவதாகவும், 21 சதவிகிதம் பேர் ரொமான்டிக் டின்னருடன் காதலை வெளிப்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

34 சதவிகிதம் பேர் பரிசுகள் கொடுத்தும், 15 சதவிகிதம் பேர் விடுமுறை திட்டமிடல் மூலமும் காதலை சொல்ல விரும்புவதாக கூறி உள்ளனர். ஆய்வில் மேலும் பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக, 86 சதவிகிதம் பேர் திருமணத்துக்கு பின்புதான் காதலர் தினத்தை கொண்டாட விரும்புவதாக கூறி உள்ளனர்.

இதேபோல ஆன்லைனில் உணவு தொடர்பான தகவல்களை தேடுபவர்களின் எண்ணிக்கையும் 2018-ம் ஆண்டில் இரட்டிப்பாகி இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் அதிகம் தேடப்படும் உணவாக பீட்சா உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags : #MATRIMONY #PIZZA #DATING #INDIA