திடீர் ஓய்வு முடிவை எடுத்த ஆர்சிபி ஸ்டார் ப்ளேயர்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Aug 05, 2019 10:47 PM
தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

36 வயதான தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் கடந்த 2004 -ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இதுவரை 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டெய்ன் 439 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு ராய்ல் சேலஞ்சர்ஸ் அணியின் சார்பாக விளையாடினார். அந்த தொடரில் பெங்களூரு அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தது. அப்போது தொடரின் பாதியில் பெங்களூரு அணியில் ஸ்டெய்ன் இணைந்தார். இதனால் பெங்களூரு அணி அடுத்தடுத்த சில போட்டிகளில் வெற்றியை சந்தித்தது.
ஆனால் தொடரின் இடையே காயம் காரணமாக பாதியிலேயே ஸ்டெய்ன் நாடு திரும்பினார். இந்த காயம் சரியாகததால் நடந்துமுடிந்த உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பும் பறிபோனது. இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக ஸ்டெய்ன் அறிவித்துள்ளார். மேலும் டி20 போட்டிகளில் அதிக கவனம் செலுத்த உள்ளதாக ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார்.
