'90ஸ் கிட்ஸ் பாவம் ராக்'... 'இப்படி அழ வச்சிட்டீங்களே'...'ராக் எடுத்த முடிவு'... சோகத்தில் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Aug 06, 2019 01:13 PM

90ஸ் கிட்ஸ்சுகளின் ஆஸ்தான மல்யுத்த வீரரான தி ராக் மல்யுத்த போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்..

The Rock Announces Retirement From WWE

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மல்யுத்த போட்டிகளில் பங்கேற்று வரும் ராக், தற்போதுதான் முதன்முறையாக ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற டுவேன் ஜான்சன் ஓய்வு குறித்த தகவலை ரசிகர்களிடம் பகிர்ந்தார். இது அவரது ரசிகர்களுக்கு நிச்சயம் சோகமான அறிவிப்பு என அவரது ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தனது ஓய்வு குறித்து பேசிய ராக் '' 'மல்யுத்த போட்டிகளை மிஸ் செய்கிறேன். மல்யுத்தம் எனக்கு மிக மிக பிடித்தமானது. இப்போது அதில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இது மிகவும் கடினமான முடிவு. ஆயிரக்கணக்கான ரசிகர்களின் வரவேற்பு, நேரடியாக கண்டு களிக்கும் பார்வையாளர்கள் என மல்யுத்தக் களம் அருமையாக இருக்கும். இனிமேல் அது கிடைக்கப் போவது இல்லை'' என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ரெஸ்ட் மேனிய 32 போட்டியில், வயாட் பிரதர்ஸில் ஒருவரான எரிக் ரோவனை ராக் வீழ்த்தினார். ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் படி அதிக சம்பளம் பெறும் நடிகர் தி ராக் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #WWE #DWAYNE JOHNSON #THE ROCK #RETIREMENT