4 மாதங்களில் '26 கிலோ' எடை குறைத்த 'சானியா மிர்சா'... வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்....

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Suriyaraj | Feb 10, 2020 06:34 PM

நான்கு மாதங்களில் 89 கிலோவிலிருந்து 63 கிலோவுக்கு உடல் எடையை குறைத்திருப்பதாக சானியாமிர்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Saniya says she has lost 26 kg body weight in four months

இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்ஸா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து அவருக்கு  குழந்தை பிறந்தது. இதனால் நீண்ட நாட்களாக டென்னிஸ் விளையாட்டிலிருந்து விலகியிருந்தார். இந்த இடைவெளியில் அவரது உடல் எடை 89 கிலோவாக அதிகரித்து விட்டது.

இந்தநிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது சானியா மிர்சா உடல் எடைக் குறைந்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவில், ‘நம் எல்லோருக்கும் வாழ்க்கையில் இலக்குகள் இருக்கும். தினசரி இலக்கு, நீண்ட கால இலக்கு என்று இருக்கும். 89 கிலோவிலிருந்து 63 கிலோவாகக் குறைவதற்கு எனக்கு 4 நான்கு மாத காலம் தேவைப்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘குழந்தைப் பிறந்ததற்குப் பிறகு உடல் எடை கூடியிருந்த நான், தற்போது ஆரோக்கியமான உடலைக் கொண்டு வருவதற்கு இந்தக் காலம் தேவைப்பட்டுள்ளது’ என்றும் பதிவிட்டுள்ளார்.

 

இனி மீண்டும் டென்னிஸ் போட்டிகளில் சானியா தனது முத்திரையைப் பதிக்க ரசிகர்கள் வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Tags : #SANIA MIRZA #TENNIS #WEIGHT LOSS #INSTAGRAM #VIRAL PHOTO