நாங்க 'அத' பண்ணலன்னா... எங்களால 'ஹேப்பியா' இருக்க முடியாது...! - வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுவிற்கு 'பிரபல பீட்சா' நிறுவனம் அளித்துள்ள வாக்குறுதி...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய பளுதூக்குதல் வீராங்கனையான மீராபாய் சானு இந்தியா சார்பாக டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 49-கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவிலிருந்து ஒரே வீராங்கனையாக கலந்து கொண்டார்.

கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். அதோடு, ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளி வென்ற முதல் வீராங்கனை என்ற புகழுக்கும் சொந்தக்காரராக மாறியுள்ளார்.
இந்தியாவே போற்றும் நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பின்போது, 'என்னுடைய ஒரு லட்சியம் நான் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும். இதற்காக என்னுடைய உணவு முதற்கொண்டு எனக்குப் பிடித்த பலவற்றை இழந்து டயட்டில் இருந்தேன்.
இனி சிறிது நாட்களுக்கு பிடித்த உணவுகளை சாப்பிடவேண்டும் என்று தோன்றுகிறது. முதலில் எனக்கு பிடித்த பீட்சாக்களை சாப்பிட தான் என் கை போகும். நான் நீண்டகாலமாக பீட்சா சாப்பிடவில்லை. இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தேன். முதலி்ல் எனக்கு பீட்சா வேண்டும்' எனக் கூறியுள்ளார்.
என்னடா இது பீட்சா மீது இவ்வளவு ஆசையா என நினைக்கும் நேரத்தில், மீராபாய் சானுவின் வீடியோவைப் பார்த்த டோமினோஸ் பீட்சா நிறுவனமோ அதிரவைக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சானுவின் ஆசையை தாங்கள் நிறைவேற்றுவதாகக் கூறி, தன் டிவிட்டர் பக்கத்தில், 'மீராபாய் சானு, இந்த தேசத்துக்காக வெள்ளிப்பதக்கம் வென்றதற்காக வாழ்த்துகள். உலக அரங்கில் இந்தியர்களின் கனவை நிறைவேற்றியுள்ளீர்கள். உங்களை மகிழ்விக்க வாழ்நாள் முழுவதும் இலவசமாக பீட்சாகளை வழங்காமல் எங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது' என ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.
அதோடு மட்டுமல்லாமல், மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானுவிற்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங் அறிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
