ஆஹா..! பீட்சா சாப்பிட்டு ‘நெட்பிளிக்ஸ்’ பார்க்க சம்பளம்.. இந்த ‘வேறலெவல்’ வேலைக்கு ஆட்கள் தேடும் கம்பெனி..!
முகப்பு > செய்திகள் > வணிகம்நெட்பிளிக்ஸ் பார்ப்பதற்கு சம்பளமும் கொடுத்து சாப்பிட பீட்சாவும் வழங்கு வேலை குறித்து அறிவிப்பு வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கேட்பதற்கு நம்பும்படியாக இல்லாமல் இருக்கலாம் ஆனால், உண்மையாகவே இப்படி ஒரு வேலைக்கு நிறுவனம் ஒன்று சம்பளம் கொடுக்க தயாராக இருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த போனஸ்ஃபைண்டர் (BonusFinder) என்ற நிறுவனம் 'binge watcher' எனும் வேலைக்கு ஆள் தேடி வருகிறது. 2021ம் ஆண்டு தொடங்கியுள்ளதாலும், சில நாடுகளில் மீண்டும் லாக்டவுன்கள் போடப்பட்டுள்ளதாலும், நெட்பிளிக்ஸ் பார்க்கவும், பீட்சா சாப்பிடவும் சம்பளம் கொடுக்க தயாராக இருப்பதாக போனஸ்ஃபைண்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வரும் பிப்ரவரி 9ம் தேதியன்று தேசிய பீட்சா தினம் கொண்டாடப்படுகிறது. அன்று, வேலைக்கான ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலைக்கு தேர்வாகும் நபர்கள், ஜாலியாக நெட்பிளிக்ஸ் பார்த்துக்கொண்டே பீட்சா சாப்பிடுவதற்கு 500 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.36,600) சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கு எந்தவொரு கண்டீஷனும் கிடையாது. நெட்பிளிக்ஸில் பார்க்கும் சீரிஸ் மற்றும் படங்களுக்கு விமர்சனம் எழுத வேண்டும். மேலும் நடிப்பு, சீரிஸ்/படம் முடிவு, கதைக்களம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் அவற்றிற்கு மதிப்பிட வேண்டும்.
இதேபோல் அவர்கள் சாப்பிடும் பீட்சாவுக்கும் மதிப்பிட வேண்டும். பீட்சாவின் தரம், கலவை பொருட்களின் தரம், தோற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் பீட்சாவுக்கு மதிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
