'அடிச்ச அடி ஆண்டவனுக்கு கேட்டுச்சோ இல்லயோ... பிசிசிஐ-க்கு கேட்டுருச்சு'!.. அவசர அவசரமாக இங்கிலாந்து புறப்படும் 3 இளம் வீரர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாகவே காயமடைந்த வீரர்களுக்கு மாற்றாக அங்கு செல்லவிருக்கும் இந்திய அணி வீரர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்காக கடந்த ஜூன் மாதமே கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சென்றிருந்தது.
இந்நிலையில், அணியில் இடம் பெற்றிருந்த சுப்மன் கில், ஆவேஷ் கான் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய வீரர்களுக்கு பயிற்சி ஆட்டத்தில் காயம் ஏற்பட்டது. அதனால் அவர்களுக்கு மாற்றாக ப்ரித்வி ஷா, சூரியகுமார் யாதவ் மற்றும் ஜெயந்த் யாதவ் ஆகியோர் விரைவில் இங்கிலாந்துக்கு புறப்பட உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இலங்கைக்கு எதிரான தொடரில், இந்திய அணியில் ப்ரித்வி ஷா மற்றும் சூரியகுமார் யாதவ் விளையாடி வருகின்றனர். எனவே, டி20 தொடர் முடிந்த பிறகு அவர்கள் இலங்கையில் இருந்து நேரடியாக இங்கிலாந்து பயணிப்பார்கள் எனத் தெரிகிறது. டெஸ்ட் அணியில் விளையாடும் வாய்ப்பை சூரியகுமார் யாதவ் முதல் முறையாக பெற்றுள்ளார்.
மேலும், துணைக் கேப்டன் ரஹானே முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகம் தான். அவருக்கு மாற்றாக கே.எல்.ராகுல் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.