'நெக்ஸ்ட் டைம் ரன்வீரை பார்த்தா'... 'என் மகள் இப்படித்தான் சொல்வாள்'... 'தோனி பகிர்ந்த விஷயம்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Oct 07, 2019 11:24 PM

தற்போது உள்ள குழந்தைகள் மிகவும் வித்தியாசமானவர்கள் என, தனது குழந்தை ஸிவாவின் செயலால் ஆச்சர்யமடைந்து இந்திய அணி வீரர் தோனி கூறியுள்ளார்.

Dhoni shares what daughter Ziva and Ranveer have in common

இந்திய அணியின் முன்னணி வீரரான மகேந்திர சிங் தோனி, தற்போது விடுமுறையில் உள்ளார். இந்நிலையில், தனது மகளின் செயலால் ஈர்க்கப்பட்ட அவர், ஸிவாவின் நடவடிக்கைகள் குறித்து பதிவு ஒன்றை, தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தனது மகள் மற்றும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், இருவரது புகைப்படைத்தையும் இன்ஸ்டாகிராமில், பதிவிட்டுள்ளார். அந்தப் படத்தில் இருவரும் ஒரே மாதிரியான கூலிங் கிளாஸ் அணிந்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து தான் ஆச்சரியமடைந்த விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

அதில், ‘ரன்வீர் ஏன் எனது கூலிங் கிளாஸை அணிந்திருக்கிறார்? என்று கேட்டாள். பின்பு அவளது கூலிங் கிளாஸை கண்டுப்பிடிக்க மாடிக்கு ஓடிய அவள், கடைசியாக எனது கூலிங் கிளாஸ் என்னிடம் மட்டுமே உள்ளது என்று கூறினாள். இந்த காலத்தில் குழந்தைகள் மிகவும் வித்தியாசமானவர்கள். நான்கரை வயதில், இந்த மாதிரியான கூலிங் கிளாஸ் நான் அணிந்தது இல்லை. அடுத்த முறை ரன்வீரை பார்த்தால், உங்களதை போன்ற கூலிங் கிளாஸ் என்னிடம் உள்ளது என்று கூறுவாள் என்பதை உறுதியாக சொல்கிறேன்’ என பதிவிட்டுள்ளார். இதற்கு நடிகர் ரன்வீர் சிங் ‘ஃபேசனிஷ்டா... ஹா ஹா ஹா...’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : #MSDHONI #RANVEERSINGH #INSTAGRAM #ZIVADHONI #COOLINGGLASS