நானும் அவர் ‘ஃபேன்’ தான் ஆனா... ‘ஐபிஎல்’ திறமையான ‘இளம்’ வீரர்களுக்கானது... ‘சூசகமாக’ சொன்ன பிரபல வீரர்...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Feb 28, 2020 01:18 PM

டி20 உலகக் கோப்பை போட்டியில் தோனி விளையாடுவது குறித்து கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

Kapil Dev Speaks About MS Dhoni In IPL And T20 World Cup

தோனி குறித்துப் பேசியுள்ள முன்னாள் இந்திய வீரர் கபில்தேவ், “எதிர்காலம் என்பது தோனிக்கு மட்டுமானதல்ல, திறமையான பல இளம் வீரர்களுக்கானது. நான் தோனியின் ரசிகன் தான். அவர் தன் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார். அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு ஏராளமான பங்களிப்பை கொடுத்துள்ளார். ஒரு ரசிகனாக நான் அவர் விளையாட வேண்டும் என்றே விரும்புகிறேன்.

ஆனால் ஒரு தொழில்ரீதியான வீரராக அவர் கிரிக்கெட் ஆடி நீண்ட காலம் ஆகிவிட்டது. ஐபிஎல் மூலம் அவர் மீண்டும் அணிக்குள் வரலாம் எனக் கூறலாம். ஆனால் தங்களுடைய திறமையை நிரூபித்து இந்திய அணிக்குள் நுழைய விரும்பும் ஏராளமான இளம் வீரர்களுக்கானதே ஐபிஎல் போட்டிகள். எதிர்கால இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கானது ஐபிஎல்” எனக் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் தோனி விளையாடுவதைப் பொறுத்தே டி20 உலகக்கோப்பையில் அவர் விளையாடுவது தீர்மானிக்கப்படும் என ரவிசாஸ்திரி உள்ளிட்டோர் கூறிவரும் நிலையில் கபில்தேவ் இவ்வாறு கூறியுள்ளார்.